இந்தியா

தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி... வங்காளதேச எம்.பி. கொலையில் திடுக்கிடும் தகவல்

Published On 2024-05-24 13:53 GMT   |   Update On 2024-05-24 13:53 GMT
  • கொல்கத்தாவிற்கு மே 12-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்தார்.
  • 14-ந்தேதி கடைசியாக தென்பட்ட இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

வங்காள தேசம் நாட்டின் ஆளும் கட்சி எம்.பி. அன்வாரூல் அஷீம் அனார் கொலை செய்யப்பட்ட விதம் பதைபதைக்க வைத்துள்ளது. போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்காள தேசம் நாட்டின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்வாரூல் அஷீம் அனார். இவர் அடிக்கடி கொல்கத்தா வருவதும், நண்பர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ந்தேதி கொல்கத்தா வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் உடன் தங்கியிருந்தார். பின்னர் மே 13-ந்தேதி முதல் காணாமல் போனார். அவர் கடைசியாக கொல்கத்தாவின் புறநகரில் உள்ள நியூ டவுனின் அடிக்குடிமாடி வளாகத்தில் தென்பட்டதாகவும், அதன்பின் கொலை செய்யப்பட்டு தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பக்கெட்டில் எடுத்துச் சென்று பல்வேறு இடங்களில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணையில் அன்வாரூல் அஷீம் அனார் சில திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் மும்பை கசாப் கடையில் பணியாற்றிய ஜிகாத் ஹவல்தார் (24) என்பவரை கைது செய்தனர். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு சிலரால் கொல்கத்தா அழைத்து வரப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொல்கத்தா வந்து மும்பையில் உள்ள கறிக்கடைகயில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் அன்வாரூல் அஷீம் அனாரை கொாலை செய்து தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி நகரில் பல பகுதிகளில் வீசியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட அக்தர்ருஷ்மான் என்பரையும் போலீசார் தேடிவருகின்றனர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேசத்தவர் ஆவார். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கொலை செய்வதற்காக 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

பெண் ஒருவர் மாய வலை வீசி அவரை சிக்கவைத்து அந்த அடிக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண்ணை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு பெண்ணுடன் எம்.பி. சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தால்தான் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Tags:    

Similar News