இந்தியா
ஹோலி: அனைவருக்கும் மகிழ்ச்சியின் வசந்தத்தைக் கொண்டுவரட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து
- ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- அனைவருக்கும் மகிழ்ச்சி மழையைப் பொழியட்டும்.
நாடு முழுக்க இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை புதிய ஆற்றலைச் சூழ்ந்துள்ளது, இதுவே அதன் மிகப்பெரிய சிறப்பு என்று பிரதமர் மோடி கூறினார்.
இது குறித்த x தளப் பதிவில், "என் சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஹோலி வாழ்த்துக்கள். வண்ணங்களாலும், உற்சாகத்தாலும் நிறைந்த இந்தப் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி மழையைப் பொழியட்டும். ஒவ்வொரு வாழ்க்கையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியின் வண்ணங்களால் தெளிக்கப்படட்டும் - இதுவே எனது மனமார்ந்த விருப்பம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.