இந்தியா

அசாம் சட்டசபை தேர்தல்: தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2026-03-03 21:24 IST   |   Update On 2026-03-03 21:24:00 IST
  • 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
  • கவுரவ் கோகாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏப்பரல் மாதம் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படலாம். தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

அசாம் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்காத் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் 2016-ம் ஆண்டு ஆட்சியை இழந்தது.

Tags:    

Similar News