இந்தியா
null

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எந்த சட்டம் உரிமை அளித்தது?- காமேனி கொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்

Published On 2026-03-03 17:12 IST   |   Update On 2026-03-03 17:14:00 IST
  • வெளியில் உள்ள தலையீடு இல்லாமல் ஈரான் மக்கள், தங்களுடைய சொந்த தலைமையத்துவத்தை முடிவு செய்ய வேண்டும்.
  • இதை செய்ய எந்த சட்டம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உரிமை கொடுத்தது?.

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார். அவர் மனைவி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45-க்கும் மேற்பட்ட ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காமேனி கொலைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

வெளியில் உள்ள தலையீடு இல்லாமல் ஈரான் மக்கள், தங்களுடைய சொந்த தலைமையத்துவத்தை முடிவு செய்ய வேண்டும். காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதை செய்ய எந்த சட்டம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உரிமை கொடுத்தது?.

ஜம்மு காஷ்மீர் மக்கள் நிலைமை மோசமடைய அனுமதிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சிலர் சூழ்நிலையை கெடுக்க முயற்சிக்கிறார்கள், மேலும் சில இடங்களிலிருந்து சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. இங்கு காவல்துறையினரோ அல்லது மத்திய துணை ராணுவப் படையினரோ எந்தவொரு துஷ்பிரயோகத்தையும் விரும்பவில்லை.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

அபயதுல்லா காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை அடக்க ராணுவம் முயற்சி மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News