இந்தியா

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்தது என்.ஐ.ஏ.

Published On 2024-05-24 14:25 GMT   |   Update On 2024-05-24 14:25 GMT
  • பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைதுசெய்தது.
  • இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடினர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சோயப் அகமது மிர்சா என்ற சோட்டுவை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News