search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veppampattu"

    வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பம்பட்டு:

    வேப்பம்பட்டு ஆர்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். வெல்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    ஆனால் பிறந்த 7 நாட்களில் குழந்தை இறந்து விட்டது. இதனால் ரேவதி குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ரேவதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேப்பம்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு, நேரு தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது22). நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    அப்போது இருளில் மறைந்து இருந்த மர்ம கும்பல் திடீரென விக்னேசை சுற்றி வளைத்து சரமாரியா வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    விக்னேஷ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். செவ்வாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் விக்னேஷ் இருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதன் பின்னரே அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த வாலிபால் போட்டியின் போது விக்னேசுக்கும் சிலருக்கும் இடையே தகராறு உருவாகி இருக்கிறது.

    இந்த மோதலில் கொலை நடந்ததா? கடைசியாக விக்னேசின் செல்போனுக்கு பேசியது யார்? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேப்பம்பட்டு அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு, அருண் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜி. இவரது மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள ராஜி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்து வருகிறார்.

    வேப்பம்பட்டில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு, டன்லப் நகரை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா.

    நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி சுமித்ரா மாலையில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வர சென்றார்.

    சிறிது நேரம் கழித்து சுமித்ரா திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டும் இதே வீட்டில் லேப்டாப்-ரூ. 7 ஆயிரத்தை மர்ம கும்பல் பட்டப்பகலில் சுருட்டி சென்று இருந்தனர். தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பது இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு மின்சார ரெயில் சிறிது வேகத்தை குறைத்து வந்தது.

    எனவே பொது மக்கள் அந்த ரெயில் நின்று செல்வதாக நினைத்து தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது ரெயில் நிற்காமல் வேகமாக சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன், வேலு, சிவா ஆகியோர் தண்டவாளத்தில் இருந்து சிறிது தூரம் தூக்கி வீடப்பட்டனர். இதில் முருகன், வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த சிவாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருவள்ளுர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சென்று ரெயில்கள் ஏறுவதற்கு ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையே இல்லாததே தொடர் விபத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மேம்பாலம் அமைத்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×