என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி
    X

    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி

    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பது இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு மின்சார ரெயில் சிறிது வேகத்தை குறைத்து வந்தது.

    எனவே பொது மக்கள் அந்த ரெயில் நின்று செல்வதாக நினைத்து தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது ரெயில் நிற்காமல் வேகமாக சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன், வேலு, சிவா ஆகியோர் தண்டவாளத்தில் இருந்து சிறிது தூரம் தூக்கி வீடப்பட்டனர். இதில் முருகன், வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த சிவாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருவள்ளுர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சென்று ரெயில்கள் ஏறுவதற்கு ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையே இல்லாததே தொடர் விபத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மேம்பாலம் அமைத்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×