search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people death"

    • கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர்.
    • கனகராஜ்தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்ற போது லாரி மோதி பலியானார்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர். இவர் கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூர் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புதுவாடிபுதூரை சேர்ந்தவர் முருகவேல். இவர் மனைவி சுசீலா (50). கனகராஜின் மாமியரானா சுசீலா பாலவிடுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருமகன் கனகராஜுடன் இரு சக்கர வாகனத்தில் காளியப்பனூருக்கு சென்றுள்ளார்.

    வெள்ளியணை அருகேயுள்ள ஒத்தையூர் அருகே செல்லும்போது தோகைமலையிலிருந்து ஓசூருக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி , கனகராஜ் ஓட்டி சென்று இரு சக்கர வாகனத்தின் (ஸ்கூட்டர்) மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ், சுசீலா சடலங்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பழைய சுக்காம்ப ட்டியைச் சேர்ந்த கர்ணனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு தி.மு.க. தொண்டர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். #karunanidhideath #dmk
    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கணபதி (87) நெசவுத் தொழிலாளி. முன்னாள் ராசிபுரம் வட்ட துணைச் செயலாளர், முன்னாள் வெண்ணந்தூர் ஒன்றிய அவைத்தலைவர், அலவாய்பட்டி கிளை முன்னாள் செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

    இவர் கடந்த சில நாட்களாக கழக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை தொலைகாட்சியில் பார்த்து, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் அடக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து தொலைக்காட்சியில் கருணாநிதி மரணம் குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதே போல் ராசிபுரம் ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் பெருமாயி அம்மாள் (53) விவசாயி தொழிலாளியான இவர் கருணாநிதி உடலைப் பார்த்துக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது கணவர் பெயர் பெரியசாமி. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

    கருணாநிதியின் மறைவை அறிந்து அதிர்ச்சியில் மரணமடைந்து அவர்கள் பிரிவால் வாடும் திமுக தொண்டர்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் ஆறுதல் கூறினர். #karunanidhideath #dmk
    வேப்பம்பட்டில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பது இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு மின்சார ரெயில் சிறிது வேகத்தை குறைத்து வந்தது.

    எனவே பொது மக்கள் அந்த ரெயில் நின்று செல்வதாக நினைத்து தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது ரெயில் நிற்காமல் வேகமாக சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முருகன், வேலு, சிவா ஆகியோர் தண்டவாளத்தில் இருந்து சிறிது தூரம் தூக்கி வீடப்பட்டனர். இதில் முருகன், வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

    பலத்த காயம் அடைந்த சிவாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருவள்ளுர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சென்று ரெயில்கள் ஏறுவதற்கு ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையே இல்லாததே தொடர் விபத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மேம்பாலம் அமைத்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×