search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry and money robbery"

    இனையம் அருகே மாதா ஆலயத்தின் முன்பக்க கதவை உடைத்து 14 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான இனையத்தை அடுத்த சின்னத்துறையில் பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது.

    பெரியநாயகி மாதா ஆலயத்தில் தற்போது விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஊழியர்கள் அங்கு வேலைபார்த்து வருகிறார்கள். ஆலயத்தின் உட்பகுதியிலும், வெளியிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஆலயத்தில் இருந்த பெரியநாயகி மாதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகள் மற்றும் ஆபரணங்கள் மாதா சிலையில் போடப்பட்டிருக்கும். இதனை ஊர் மக்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் அவ்வப்போது பார்த்து செல்வது வழக்கம்.

    ஆலயபணிகளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் ஆலயத்திற்கு சென்றபோது, ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆலய நிர்வாகிகள் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்த போது, மாதா சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது. சிலையில் மாலை, பொட்டு கம்மல், மோதிரம், வளையல் என மொத்தம் 14 பவுன் நகைகள் போடப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் காணவில்லை.

    மேலும் ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் திருட்டுப்போய் இருந்தது. உண்டியலில் சுமார் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    ஆலயத்தில் மாதா சிலையில் போடப்பட்ட நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது பற்றி ஆலய நிர்வாகி ஜஸ்டின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த ஆலயத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது மர்மநபர் ஒருவரின் கைரேகை சிக்கியது. அதன் அடிப்படையில் ஆலயத்தில் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மண்டைக்காடு அருகே அழகன்பாறை கோவிலான் விளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது.

    இதுபற்றி ராஜேந்திரன் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகிறார்கள்.
    தக்கலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை:

    தக்கலை அருகே பனங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி (வயது 32).

    சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது.

    இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பீரோவில் இருந்து 4 பவுன் செயின் மற்றொரு பீரோவில் இருந்து ரூ.6,500 பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் உள்ளதா? கொள்ளையனின் உருவம் அதில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    இரணியலை அடுத்த கட்டிமாங்கோடு பகுதியில் கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று கோவில் பூஜை முடிந்தபின்னர் பூசாரி நடையை சாத்திவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து வந்தார். மேலும் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். கோவிலின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கோவிலின் அறைக்கதவை உடைத்து உள்ளே இருந்த வெள்ளியால் ஆன சாமி முகம் 2, பித்தளை குத்து விளக்குகள் 4 மற்றும் சி.டி.பிளேயர் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் முன்பு இருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட இடம், கோவில் அறைக்கதவு ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    சென்னை ஆவடியில் நகை மற்றும் பணத்துக்காக கணவன், மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AvadiMurder
    திருநின்றவூர்:

    சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் வாங்கி அதில் பண்ணை வீட்டை கட்டி குடியேறினார்கள். முன் பகுதியில் வீட்டை கட்டி பின் பகுதியில் பெரிய தோட்டத்தையும் அமைத்திருந்தனர்.

    ஜெகதீசனுக்கு 65 வயது ஆகிறது. விலாசினிக்கு 60 வயது. வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு இருவரும் ஆட்களை நியமித்து இருந்தனர். கணவன்-மனைவியாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தனர்.

    கடந்த 3 மாதமாக வீட்டில் வேலை செய்து வந்த இருவர் திடீரென நின்றுவிட்டனர். இதனால் 10 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவை சேர்ந்த கணவன்-மனைவியை வேலைக்கு சேர்ந்தனர்.

    இன்று காலையில் நீண்ட நேரமாகியும் ஜெகதீசன், விலாசினி இருவரும் வெளியில் வரவில்லை. வேலையாட்களையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது கணவன்- மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

    இணை கமி‌ஷனர் விஜய குமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஜெகதீசனும், விலாசினியும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நகை-பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இருவரும் துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு.

    சுமார் 50 பவுன் நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஜெகதீசனையும், விலாசினியையும் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு சேர்ந்த ஆந்திர தம்பதி வீட்டில் இல்லை. இருவரும் மாயமாகி விட்டனர். நகை- பணத்துக்காக அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையுண்ட ஜெகதீசன், விலாசினி இருவரின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யாருடன் பேசி உள்ளனர்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே கணவன்- மனைவியை கொலை செய்ததாக கருதப்படும் ஆந்திர தம்பதி யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    குற்றவாளிகளை பிடிக்க ஆந்திர மாநிலத்துக்கும் தனிப்படை விரைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    தனியாக வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விலாசினி, ஜெகதீசனுக்கு 2-வது மனைவி ஆவார். சமீபத்தில்தான் அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பணி ஓய்வு பணம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பணம் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

    ஜெகதீசனின் முதல் மனைவி பெயர் சுகுமாரி. இவர் அண்ணாநகரில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். விலாசினிக்கு குழந்தைகள் இல்லை. #AvadiMurder
    மண்ணடியில் பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ. 3லட்சம் பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ராயபுரம்:

    மண்ணடி, பிடாரியார் தெருவை சேர்ந்தவர் சபிபுல்லா, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று மாலை அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மகும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து முந்தியால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர், விக்னேஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி பிரேமா. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்.

    நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 7 ½ பவுன் நகை, ரூ.6 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை - பணத்தை சுருட்டி சென்று உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தோல் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு டவுன் சின்ன மசூதி தெருவை சேர்ந்தவர் முஹம்மத்ரசாக் (54).தோல் தொழிலதிபர். இவர் பெங்களூருவில் தனது தங்கை புதியதாக கட்டியுள்ள வீடு கிரகபிரவேசத்திற்கு சென்றார்.

    நேற்று மாலை அவர் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் அறையில் பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் ரொக்க பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கொள்ளையர்கள் வீட்டின் அருகிலுள்ள காலி மனை பகுதியிலிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பின்பக்க வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

    பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பண்ணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 55). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி அமிர்தலட்சுமி. இவர் பண்ணக்குப்பம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் சரண்யாவுக்கு அடுத்த மாதம் 31-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.

    இதற்காக கோவிந்த ராஜன் 60 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். நேற்று இரவு கோவிந்த ராஜன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிந்தராஜ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6,500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    வீட்டில் மேல்அலமாரியில் இருந்த சூட்கேசை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் இருந்த பட்டுப்புடவைகளை எடுத்து கொண்டு சூட்கேசை வீட்டுக்கு வெளியே வீசினர். பின்னர் நகை-பணம், பட்டுப் புடவைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

    காலையில் கண்விழித்து பார்த்த அமிர்தலட்சுமி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது கணவர் கோவிந்தராஜனை எழுப்பினார்.

    உடனே 2 பேரும் மற்றொரு அறைக்கு சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை-பணம் மற்றும் பட்டு புடவைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

    இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சேலம்:

    சேலம் கந்தப்பட்டி அருகே மேம்பாலம் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் ரகீமா. டாக்டரான இவர் தர்மன் நகர் 3-வது கிராஸ் பகுதியில் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார். மேலும் தனது வீட்டிலும் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். இன்று காலை அவர் அங்கிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததையும், கதவு திறந்து கிடந்ததையும் கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் ரகீமா வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் எல்லாம் வெளியே தூக்கி வீசப்பட்டு இருந்தது. சமையல் அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அறைகளில் இருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    ரகீமா கோவைக்கு செல்லும் முன்பு பீரோவில் 40 பவுன் நகையும், ரூ.45 ஆயிரம் பணமும் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நகையும், பணத்தையும் காணவில்லை.

    இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக ரகீமா தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து வீடு முழுவதும் பார்வையிட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோ மற்றும் கதவில் கைரேகைகள் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருந்தது. அந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். இந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களுடன் ஒப்பிட்டு பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ரகீமா நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை கொள்ளையர்கள் யாரோ பார்த்து இருக்கிறார்கள். பின்னர் நள்ளிரவில் கொள்ளை கும்பல் மேம்பால நகருக்கு வந்து டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து தங்களது கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.கொள்ளை போன இந்த நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என தெரிய வந்தது.

    டாக்டர் ரகீமாவிடம் போலீசார், உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? சந்தேகப்படும் நபர்களை தெரிவிக்கலாம் என்றனர். இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    அருகில் உள்ள வீடுகளின் முன்பு சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி இருக்கிறார்களா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    டாக்டர் வீட்டில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகனேஸ்வரன். லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்கைகள் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் கதவை பூட்டி விட்டு மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்து வீட்டின் கீழ் தள முன்பக்க கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் இருக்கிறதா? என தேடினார்கள். பீரோவை திறந்து பார்த்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து ஒரு இரும்பு பெட்டியை எடுத்து உடைத்து பார்த்தனர்.

    அதில் வீட்டின் பத்திரம், 3½ பவுன் நகை, ரூ.1000 ரொக்கம் ஆகியவை இருந்தது. இதில் பணத்தையும், நகையையும், திருடிக் கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து தெருவுக்கு சென்றார்கள். அங்கு 2 வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். கதவு தடிமனாக இருந்தால் உடையவில்லை. இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கம்பத்தில் பெண்ணிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி ஆனந்தி (வயது36). இவர் பையில் ரூ.17 ஆயிரம், தங்கத்தோடு, செல்போன், கேன்டீன்கார்டு ஆகியவற்றை வீட்டின் முன்பு வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது அந்த பை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் ஆனந்தியை நோட்டமிட்டு நகை-பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணிடம் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வடமதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளைபோனது தெரிந்தது. #Tamilnews

    வேப்பம்பட்டில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு, டன்லப் நகரை சேர்ந்தவர் சுரேஷ். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா.

    நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி சுமித்ரா மாலையில் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வர சென்றார்.

    சிறிது நேரம் கழித்து சுமித்ரா திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டும் இதே வீட்டில் லேப்டாப்-ரூ. 7 ஆயிரத்தை மர்ம கும்பல் பட்டப்பகலில் சுருட்டி சென்று இருந்தனர். தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×