இந்தியா

ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வலுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டீஸ்

Published On 2024-05-24 14:12 GMT   |   Update On 2024-05-24 14:12 GMT
  • ஆபாச வீடியோ வெளியானதால் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம்.
  • இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம்.

கர்நாடகா மாநிலத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பெண்கள் இருப்பது போன்ற வீடியோக்கள் பல பென் டிரைவ்கள் மூலம் கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கர்நாடகா மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதற்கிடையே வீடியோ வெளியானதும் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார். தூதரக சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருந்த அவர் எளிதாக ஜெர்மனி செல்ல வழிவகுத்தது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கடிதம் எழுந்தியிருந்தார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மத்திய அரச ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கர்நாடகா அரசிடமிருந்து கடந்த 21-ந்தேதி அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் எம்எல்ஏ ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய கர்நாடகா போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News