இந்தியா

கடித்த பாம்புடன் வந்த ரிக்ஷா டிரைவரால் மருத்துவமனையில் பரபரப்பு... வீடியோ

Published On 2026-01-13 15:39 IST   |   Update On 2026-01-13 15:39:00 IST
  • ரிக்ஷா டிரைவர் சட்டை பைக்குள் இருந்து பாம்பை எடுத்ததால் பரபரப்பு.
  • போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இ-ரிக்ஷா டிரைவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (வயது 39). இவர் இ-ரிக்ஷா டிரைவர் ஆவார். இன்று காலை மதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். திடீரென தனது பைக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள பாம்பை வெளியில் எடுத்தார். அப்போது பாம்பு படம் எடுப்பதுபோல் தலையை சற்று தூக்கியது.

இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அளித்தனர். டாக்டர்கள் அவரிடம் பாம்பை வெளியில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறினர். இந்த பாம்பு தன்னை கடித்து விட்டதாகவும், விஷ முறிவு ஊசி போட வேண்டும் என்றும் டாக்டர்களிடம் அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. எனினும், அந்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News