இந்தியா
null

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் எதிரொலி: கடும் வீழ்ச்சியை சந்தித்த மும்பை பங்குச் சந்தை

Published On 2026-03-02 15:49 IST   |   Update On 2026-03-02 15:50:00 IST
  • மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1048.34 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
  • இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 312.95 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி மற்றும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 81,287.19 சென்செக்ஸ் ஆக இருந்தது. இன்று காலை மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 2743.46 புள்ளிகள் சரிந்து 78543.73 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு பெரும் சரிவை சந்தித்தன.

பின்னர் மெல்ல மெல்ல சென்செக்ஸ் உயருவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10 மணியளவில் இன்று வர்த்தகத்தில் அதிகப்படியாக சென்செக்ஸ் 80632.55 புள்ளிகளில் வர்த்தகமானது.

பின்னர் 2 மணிக்கு 79451.26 புள்ளிகளில் வர்த்தகமானது. இறுதியாக 3.30 மணிக்கு சென்செக்ஸ் 80238.93 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1048.34 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இது முந்தைய வெள்ளிக்கிழமையுடன் 1.29 சதவீதம் சரிவாகும்.

அதேபோல் இந்திய பங்குச் சந்தையின் குறியீடு நிஃப்டியும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 25178.65 ஆக இருந்தது. இன்று காலை 519.40 புள்ளிகள் சரிந்து 24659.25 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 24989.35 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 24603.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 24865.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 312.95 புள்ளிகள் சரிந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ., பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ்., எல் அண்டு டி, இந்துஸ்தான் யுனிலிவர், இன்போசிஸ், மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி டைட்டன் கோ, ஹெச்.சி.எல். டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், அதானி போர்ட் அண்டு ஸ்பெஷல் டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி.சி., சன் பார்மா Inds பங்குகள் மற்றும் ஏற்றம் கண்டிருந்தன.

Tags:    

Similar News