இந்தியா

நேருவின் சாதனையை சமன் செய்வது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடியின் பதில்...

Published On 2024-05-24 15:37 GMT   |   Update On 2024-05-24 15:37 GMT
  • குஜராத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என நிபுணர்கள் எழுத தொடங்கினர்.
  • எத்தனை முறை என்பதை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது.

மக்களவை தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி என்.டி. டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து கூறியதாவது:-

குஜராத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என நிபுணர்கள் எழுத தொடங்கினர். எத்தனை முறை என்பதை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. மோடி ஆட்சயில் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அனிலிஸ்ட் செய்ய வேண்டும்.

இது ஒரு பயணம். மோடி மூன்று முறை, ஐந்து முறை அல்லது ஏழு முறை வெற்றி பெறுவார். இந்தியாவின் 140 கோடி மக்களின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. ஆகவே இது தொடரும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு 1947-ம் ஆண்டு முதல் 1964 வரை பிரதமராக இருந்தார். 1951-52 தேர்தலில் முதன்முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1957 தேர்தலில் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

Similar News