இந்தியா

Match fixing மத்திய அரசின் ஏகபோக மாடலின் விளைவு.. இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு குறித்து ராகுல் காந்தி

Published On 2025-12-05 23:59 IST   |   Update On 2025-12-05 23:59:00 IST
  • இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
  • ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் நடக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விளைவு.

அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண மக்கள் தான் விலை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் ஏகபோகங்கள் இல்லாமல் நேர்மையான போட்டிக்கு இந்தியா தகுதியானது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்தியாவில் பல துறைகளில் ஏகபோகங்களுக்கு அரசு துணை புரிவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

  

Tags:    

Similar News