இந்தியா

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக எந்த ஆதாரமும் சிக்கவில்லை: வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால்

Published On 2024-05-24 15:41 GMT   |   Update On 2024-05-24 15:41 GMT
  • கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
  • இதன்மூலம் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகக் கூறி பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா மற்றும் என்னையும் கைதுசெய்தனர். 500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.

நேற்றைய தினம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறியிருக்கிறார். இதன்மூலம் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். அதை மறைப்பதற்காக, கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என கூறுகிறார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கு போலியானது என்பதை நீங்களே ஒப்புக்கொண்ட நிலையில், உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News