இந்தியா

பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 15% பிடித்தம் செய்ய தெலுங்கானா அரசு முடிவு

Published On 2026-02-27 17:03 IST   |   Update On 2026-02-27 17:03:00 IST
  • பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டம் அறிமுகமாகும்.
  • பெற்றோரின் தியாகத்தால் தான் உயரிய இடத்துக்கு வந்துள்ளீர்கள்.

வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்து அந்த தொகையை அவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட குரூப்-1 மற்றும் குரூப்-2 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் நேற்று அவர் இதை அறிவித்தார்.

விழாவில் பேசிய அவர், "பெற்றோரின் தியாகத்தால் தான் இந்த உயரிய இடத்துக்கு வந்துள்ளீர்கள். எனவே, பெற்றோரை சரியாகக் கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் அரசுக்குச் சொந்தமான MCR HRD நிறுவனத்திற்கும் இடையே விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் இந்த நிகழ்வில் கூறினார். 

Tags:    

Similar News