கலப்பு திருமணம் செய்ய விரும்பினேன்: கல்லூரி காதல் கதையை நினைவு கூர்ந்த சித்தராமையா
- சாதி வெறியை ஒழிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கலப்பு திருமணம்.
- இரண்டாவது அனைத்து சமூகத்தினரிடையே சமூக-பொருளாதார மேம்பாடு.
வைகாசி பவுர்ணமி "புத்த பூர்ணிமா" என்று அழைக்கப்படுகிற. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு கலப்பு திருமணம் நிகழ்ச்சிக்கு கர்நாடகா மாநிலம் மைசூரில் ஏற்பாடு செய்ய்பபட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
அப்போது தான் கலப்பு திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
நான் கலப்பு திருமணம் (ஜாதி மாறி) செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அது நடைபெறவில்லை. அந்த பெண் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் மீது காதலில் விழுந்தேன். அது என்னுடைய தவறு அல்ல. நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் திருமணம் நடைபெறவில்லை.
என் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. இதனால் என்னுடைய திருமணம் என்னுடைய சமூகத்தில் நடைபெற்றது.
சாதி வெறியை ஒழிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கலப்பு திருமணம். இரண்டாவது அனைத்து சமூகத்தினரிடையே சமூக-பொருளாதார மேம்பாடு. சமூக-பொருளாதார உயர்வு இல்லாத சமூகத்தில் சமூக சமத்துவம் ஏற்படாது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.