செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, நிதிஷ் குமார் கட்சி சமமான தொகுதியில் போட்டியிடும்- அமித் ஷா

Published On 2018-10-26 13:04 GMT   |   Update On 2018-10-26 13:04 GMT
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சமமான தொகுதியில் போட்டியிடும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். #amitshah #bjp #nitishkumar
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதங்களே இருப்பதால் மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, இப்போதிலிருந்தே வேலையில் இறங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். அமித் ஷா இன்று நிதிஷ் குமாரை சந்தித்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

சந்திப்புக்குப்பின் அமித் ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பீகார் மாநிலத்தில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் சமமான எண்ணிக்கை கொண்ட தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமித் ஷா கூறுகையில் ‘‘எங்களது சந்திப்பின்போது இரு கட்சிகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது சமமான எண்ணிக்கை கொண்ட தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அவர்களுக்கு ஏற்றபடி தொகுதியில் பகிர்ந்து அளிக்கப்படும். எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்படும். உபேந்த்ரா குஷ்வாஹா மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் எங்களுடன் இருப்பார்கள். மேலும் சில கட்சிகள் புதிதாக கூட்டணியில் இணையும்போது தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 எம்.பி. தொகுதிகள் உள்ளன. 2014-ல் பா.ஜனதா 22 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், என்சிபி 1 இடத்திலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், எல்ஜேபி 6 இடத்திலும், ஆர்ஜேடி 4 இடத்திலும், ஆர்எல்எஸ்பி 3 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. #amitshah #bjp #nitishkumar
Tags:    

Similar News