என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ் குமார்"

    • மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.
    • அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெரும் வெற்றியை பெற அதில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர் ஆகினர்.

    இந்நிலையில் மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது.

    பீகாரில் ஜாதி பிரதிநிதித்துவத்தை கருத்தில் வைத்து பாஜக மூவரை முதல்வர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது.

    சாம்ராட் சௌத்ரி - நிதிஷ் குமார்  

    பீகார் மாநில துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சௌத்ரி பட்டியலில் முதலில் உள்ளார்.

    குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த இவர் ஓபிசி பிரிவில் வருவார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு மாற்றாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது.

    எனவே கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல்வர் பதவிக்கு முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

    இரண்டாமவர் மத்திய அமைச்சராக உள்ள நித்யானந்த ராய். இவர் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முதலமைச்சராக்குவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    திலிப் ஜெய்ஸ்வால்

    மூன்றாமவர் தற்போது பீகார் அமைச்சரவையில் உள்ள திலிப் ஜெய்ஸ்வால். இவர் வைசிய சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கட்சியின் மேலிடத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

     விஜய் குமார் சின்ஹா 

    பீகாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா ஆதிக்க சாதியாக கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகார் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது ஓபிசி மற்றும் மிகவும் பின்தங்கிய சமூக வாக்குகள்தான் என்பதால் இவருக்கு முதல்வர் வாய்ப்பு எட்டாக்கனியே என்று கூறப்படுகிறது. 

    நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன், பாஜக தனது புதிய முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

    மொத்தத்தில் மகாராஷ்டிராவை போல் கூட்டணி கணக்கில் கவனம் செலுத்தி மாநில சக்திகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அதிகாரத்தை பீகாரில் பாஜக முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.  

    • பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார்.
    • நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    • மாநிலத்தில் தினமும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள் நடந்து வருகின்றன.
    • அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவையில் கேள்விகள் எழுப்பப்படும்போது அதற்கு பதில்களும் இல்லை.

    பீகார் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகக் குறைந்த ஆண்டு வருமானம், அதிகமான வேலைவாய்ப்பின்மை, விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் குறை போன்றவற்றால் கடந்த 21 வருட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் ஏழ்மையான மாநிலமாக மாறியுள்ளது. முதலீடு, கல்வி மற்றும் சுகாதாரத்தின் நிலையும் மோசமாக உள்ளது.

    மாநிலத்தில் தினமும் கூட்டு பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள் நடந்து வருகின்றன. அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவையில் கேள்விகள் எழுப்பப்படும்போது அதற்கு பதில்களும் இல்லை.

    பீகாருக்கு சுயநினைவற்ற முதல்வர் இருப்பது துரதிர்ஷ்டம்.

    இந்த ஊழல்வாதிகள் அரசின் கருவூலத்தையே வீணடித்துவிட்டனர், வரும் நாட்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போதுமான பணம் மாநிலத்தில் இருக்காது.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் பேசினார்.

    • சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது.
    • அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும்.

    2025 நவம்பரில் நடந்த பீகார் தேர்தலில் பாஜகவின் NDA கூட்டணி 202 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். 

    இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    இந்நிலையில் பீகார் தேர்தல் சமயத்தில் பாஜகவின் என்டிஏ அரசு செயல்படுத்திய பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜன் சூராஜ் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.

    பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெண்களுக்கு தலா தொழில் தொடங்க ரூ.10,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியது. சுமார் 1 கோடி பெண்கள் கணக்கில் தேர்தலுக்கு சில வாரம் முன்னர் இந்த பணம் செலுத்தப்பட்டது. 

    இந்தத் திட்டம் வாக்காளர்களைக் கவரும் ஒரு லஞ்சம் என்றும், இது நியாயமான முறையில் தேர்தல் நடப்பதைத் தடுத்தது என்றும் ஜன் சூராஜ், காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் இந்த திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது செயல்படுத்தப்பட்டது விதிமீறல் என கூறி ஜன் சுராஜ் கட்சி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதும், மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்தபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 21, 112, 202 மற்றும் 324 ஐ மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும். ரூ.10000 நேரடி பரிமாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.   

    • அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இருப்பதில்லை.
    • மக்கள் கஷ்டத்தை சந்திக்கக் கூடாத வகையில், அதிகாரிகள் கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

    பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்களை சந்திக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    குறிப்பாக பஞ்சாயத்து மற்றும் டிவிசனல் அளவிலான அலுவலங்களில் கட்டாயம் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வருகிற 19-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அதிகாரிகள் இருப்பதில்லை என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

    இந்த சிஸ்டம் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ​​நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார்.
    • அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாரால் அரசு நிகழ்வின் போது ஹிஜாப் கழற்றப்பட்ட பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் தனது அரசு வேலையை ஏற்க மறுத்துள்ளார். 

     அரசுத் திட்டத்தின் கீழ் 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாப் முகத்திரையை அகற்றி நிதிஷ் குமார் அவரது முகத்தை பார்த்தார். 

    இதற்கு ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார்.

    இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும் பணியில் சேர்த்த அரசு தரப்பில் இருந்து நிர்பந்திக்கப்படுவதாவும் அவர் தெரிவித்தார்.   

    • பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
    • "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?"

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது நிகழ்ச்சி ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை கீழே இழுத்து, அவரது முகத்தை பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை, சுமார் 1,200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பீகாரில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த நிதிஷ் குமார், திடீரென அந்தப் பெண்ணின் ஹிஜாபை கீழே இழுத்து முகத்தைக் பார்த்தார்.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

    சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கிரிராஜ் சிங் கூறுகையில், "அவர் செய்ததில் என்ன தவறு? ஒருவர் பணி நியமன ஆணை பெற வரும்போது, தனது முகத்தைக் காட்ட ஏன் பயப்பட வேண்டும்? வாக்களிக்கச் செல்லும்போது நாம் முகத்தைக் காட்டுவதில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

    முன்னதாக உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?" என்று மிக மோசமான முறையில் கருத்து தெரிவித்தார். அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் நிதிஷ் குமாரின் மனநிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன. மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா போன்ற தலைவர்களும் நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சரச்சை கருத்து.

    பீகாரில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள 'சம்வாத்' என்ற இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு (ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

    அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர், ஹிஜாப் அணிந்து நியமனக் கடிதத்தைப் பெற மேடை ஏறினார். அப்போது, மேடையில் நின்றிருந்த முதல்வர் நிதிஷ்குமார், "என்ன இது?" என்று கூறி அவரது ஹிஜாபைக் கீழே இறக்கினார்.

    நிதிஷ் குமாரின் பின்னால் நின்று கொண்டிருந்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதலமைச்சரைத் தடுக்க முயன்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் சர்சையையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் நிஷாத அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்," அவர் ஹிஜாபை இழுக்கவில்லை, நியமனக் கடிதம் சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அதை இழுத்துள்ளார்.

    இந்த விவகாரத்தை மக்கள் பெரிதாக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர், அவரை யாரும் வேட்டையாடக்கூடாது... ஹிஜாப்பை தொட்டது இவ்வளவு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால், வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று நேர்காணலின் போது அமைச்சர் சிரித்துக் கொண்டே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

    நிஷாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்திடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்," இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தரப் பிரதேச அரசு அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதைச் சொல்லும் விதமும், அந்த நயவஞ்சகச் சிரிப்பும் அவரது இழிவான, அபத்தமான மற்றும் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் காட்டுகிறது," என்றார்.

    கண்டனங்கள் வலுக்கும் நிலையில் சஞ்சய் நிஷாத் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," அந்த கருத்துகளை நான் சிரித்துக்கொண்டே, சாதாரணமாக, எனது உள்ளூர் போஜ்புரி வட்டார மொழியில் கூறினேன். எந்தவொரு சமூகம், எந்தவொரு பெண் அல்லது எந்தவொரு மதத்திற்கும் எதிராக எந்தத் தீய நோக்கமும் இல்லை, அவமதிக்கும் எண்ணமும் இல்லை," என்றார்.

    இருப்பினும், ஹிஜாப் சர்ச்சை வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிதிஷ் குமார் மற்றும் சஞ்சய் நிஷாத் மீது லக்னோவின் கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுமையா ராணா, தனது வழக்கறிஞர்களுடன் சென்று, அந்த இரு தலைவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரை அளித்துள்ளார்.

    • நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
    • லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா.
    • அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது.

    மும்பை:

    உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அணித் தேர்வை முன்னாள் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் கடுமையாக குறைகூறியுள்ளார்.

    அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'ஒரு டெஸ்ட் முடிந்ததும் அடுத்த போட்டியில் யாராவது ஒருவரை அறிமுக வீரராக இறக்குகிறார்கள். அவர்கள் சோதனை முயற்சி என்று சொல்லி தவறு செய்கிறார்கள். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் விரும்பியதை சொல்லிவிட்டு போகட்டும். அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். தேர்வு குழுவின் முன்னாள் தலைவர். எனக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியும்.

    அணித் தேர்வில் தொடர்ந்து சீரான தன்மை இருக்க வேண்டியது அவசியம். கவுகாத்தி டெஸ்டுக்கு ஆல்-ரவுண்டர் என்ற பெயரில் நிதிஷ்குமார் ரெட்டியை கொண்டு வந்தார்கள். நிதிஷ்குமாரை ஆல்-ரவுண்டர் என்று சொன்னது யார்? அவரது பந்து வீச்சை பார்த்து யாராவது ஆல்-ரவுண்டர் என்று சொல்வார்களா? மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்தார்.

    அதன் பிறகு என்ன செய்து விட்டார். அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஸ்விங் இல்லை. மெச்சத்தகுந்த பேட்ஸ்மேனும் கிடையாது. அவர் எப்படி ஒரு நாள் போட்டி அணியிலும் இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவா? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிதிஷ்குமாரை நீங்கள் ஆல்-ரவுண்டர் என்று வர்ணித்தால், நான் அவரை விட சிறந்த ஆல்-ரவுண்டர் என்று சொல்ல முடியும். அக்ஷர் பட்டேலுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அனைத்து மட்டத்திலும் சீராக ஆடும் அவரை ஏன் நீக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
    • 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

    பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.

    கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.

    பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்

    இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

    அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.  

    • துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'
    • பாஜக​வில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர் அமைசர்களாக பதவியேற்றனர்.

    பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.

    கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.

    பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்.'

    இந்நிலையில் வியாழக்கிழமை பதவியேற்ற 26 அமைச்சர்களில் 18 பேருக்கு மட்டுமே இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையின்கீழ் காவல்துறை, உளவுத்துறை, பொது சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் வருகின்றன.

    கடந்த ௨௦ ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பாஜவுக்கு நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.

    முந்தைய ஆட்சியில் சாம்ராட் சவுத்ரி வகித்து வந்த நிதி மற்றும் வணிக வரி இலாகா, ஜே.டியுவின் பிரேந்திர பிரசாத் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.

    வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் துறைக பாஜகவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வரான விஜய் சின்ஹாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் விவசாயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை பாஜக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

    ×