செய்திகள்

மம்தா பானர்ஜி சீனா, அமெரிக்காவுக்கு விரைவில் பயணம்

Published On 2018-04-25 00:17 GMT   |   Update On 2018-04-25 00:17 GMT
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #Mamatabanerjee
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்துக்கு தேவையான முதலீடுகள் தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று மாநிலத்துக்கு தேவையான முதலீடுகளை பெற முயற்சி செய்வேன்.

இதையடுத்து, வரும் ஜூன் மாதம் சீனா நாட்டுக்கு செல்லவுள்ளேன். அங்கு ஷாங்காய் நகரின் தொழிலதிபர்களை சந்தித்து கொல்கத்தாவில் முதலீடு செய்ய வருமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.

இதைத்தொடர்ந்து, சிகாகோவில் நடக்கவுள்ள சுவாமி விவேகானந்தரின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீராமகிருஷ்ண மடம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழாவை முடித்துக் கொண்டு சிலிகான் வேலி பகுதிக்கு சென்றும் முதலீடுகளை கோரவுள்ளேன். இந்த பயணம் செப்டம்பரில் அமையலாம் என தெரிவித்தார். #mamatabanerjee #Tamilnews
Tags:    

Similar News