உள்ளூர் செய்திகள்
.

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை முயற்சி

Update: 2022-05-06 09:22 GMT
சேலம் இரும்பாலை பகுதியில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை முயற்சி செய்தார்.
சேலம்:

சேலம்   இரும்பாலை பகுதியை  சேர்ந்தவர் முருகன், இவரது மகன்   புவனேஸ்வரன் (வயது 28). இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த ஆண்டு      காதலித்து திருமணம் செய்தார். 

பின்னர்   அவர்களுக் கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால்   மனைவி  அவரை பிரிந்து    தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த புவனேஸ்வரன் நேற்று  அரளி  விதையை அரைத்து குடித்து     மயங்கி கிடந்தார். 

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி அவரச சிகிச்சை பிரிவில்  சிகிச்சைக்கு சேர்த்தனர்.  அங்கு   அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News