தமிழ்நாடு

சிஎஸ்கே கட்சி வருவது உறுதி- கூல் சுரேஷ்

Published On 2024-05-22 10:13 GMT   |   Update On 2024-05-22 10:13 GMT
  • பொன்னும் பொருளும் அள்ளி கொடுக்க நான் பெரிய பணக்காரன் இல்லை.
  • நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு நண்பன் சந்தானம் தான் காரணம்.

காமெடி நடிகர் கூல் சுரேஷ் அளித்த பேட்டியில்,

நான் பாஜக-வுக்கு பிரசாரம் செய்ததை பார்த்து எனக்கு தெரிந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். சங்கி, பாஜக சப்போட்டர் என்று என்னை பலர் விமர்சனம் செய்தனர். மற்ற கட்சிகள் அழைத்து இருந்தால் அவர்களுக்கும் பிரசாரம் செய்து இருப்பேன்.

நான் பாஜக சப்போட்டர் இல்லை, என்னை மதித்து கூப்பிட்டதால் நான் அவர்களுக்கு பிரசாரம் செய்தேன். கூல் சுரேஷ் வந்தால் பிரசாரத்தில் கூட்டம் இருக்கும். எந்த வேட்பாளருக்கு அவர் ஓட்டு கேட்டு வருகிறாரோ அவர் ஜெயிப்பார் என்று அவர்களுக்கு தெரிந்து உள்ளது. அதனால் என்னை கூப்பிட்டார்கள்.

நானும் சந்தோஷமாக அவர்களுக்கு பிரசாரம் செய்தேன். நீங்கள் அழைத்தாலும் நான் வந்து இருப்பேன். வரமாட்டேன் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டு பிள்ளை தான் கூல் சுரேஷ்.

போனதுக்கு பிறகு நீங்கள் அந்த கட்சிக்கு போய்ட்டீங்க என்று சொன்னால் நான் என்ன செய்வது... இது என்னுடைய ஆதங்கம்.

அடுத்த வாரம் டெல்லி செல்கிறேன். குறைந்தபட்சம் 100 வாக்காளர் அட்டை இருக்க வேண்டும். சிஎஸ்கே-க்கு கொடி தயார் செய்து விட்டேன். இருந்தாலும் இன்னொரு சந்திப்பில் முழுமையாக கூறுவேன். கூல் சுரேஷ் கட்சி... சிஎஸ்கே கட்சி வருவது உறுதி. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இப்ப கூட ஒருவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தேன். சில பேர் கட்சி ஆரம்பிக்க போறீங்களா என்று கேட்டார்கள்.

கட்சி ஆரம்பிக்க போவது உறுதிதான். நான் செய்யும் உதவி இன்று நேற்று அல்ல 2000-த்தில் இருந்து செய்கிறேன். 300-க்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்கள் நடத்தி உள்ளேன்.

கொரோனா நேரத்தில் செய்த உதவியை சொல்ல வரவில்லை. ரத்த தான முகாம்கள், மழை நேரத்தில் நிலவேம்பு கசாயம், பல மருத்துவ உதவிகள் செய்து உள்ளேன்.

என்னுடைய ரத்த வகை AB Positive. நூறில் 5 பேருக்கு தான் இந்த வகை பிரிவு இருக்கும்.

டாக்டர்கள் என்னிடம் ரத்த தானம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கூல் சுரேஷ் நற்பணி மன்றத்தின் இருந்து அழைப்பு வந்தால் ரத்த தானம் செய்வேன். 3 மாதம் இடைவெளி விட்டுதான் ரத்ததானம் செய்ய வேண்டும். டாக்டர்களிடம் பொய் சொல்லி ரத்த தானம் செய்துள்ளேன்.

பொன்னும் பொருளும் அள்ளி கொடுக்க நான் பெரிய பணக்காரன் இல்லை. என் தாய், தந்தை கொடுத்த ரத்தத்தை மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கொடுத்தேன். வெயில் நேரத்தில் மோர் பந்தர், தண்ணீர் பந்தல் அமைத்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

கண்டிப்பாக சிஎஸ்கே கட்சி வருவது உறுதி. முடிந்தால் நீங்கள் அனைவரும் ஓட்டு போடுங்க. இன்று முதலே நான் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டதாக நினைச்சிக்கோங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கூல் சுரேஷ் கட்சிக்கு ஓட்டு போடுங்க. கண்டிப்பாக ஜெயிப்பேன். மக்களுக்கு உதவி செய்துகொண்டே தான் இருப்பேன்.

நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு நண்பன் சந்தானம் தான் காரணம்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து சிஎஸ்கே கட்சி... கூல் சுரேஷ் கட்சி பணியாற்றும். விஜய் சார் விருப்பப்பட்டால் அவர்களுடன் சேர்ந்து கூல் சுரேஷ் கட்சி பணியாற்றும். அப்படி பணியாற்றினால் விஜய் சாருக்கு இது பிளஸ் ஆக இருக்கும்.

ஒரு வேளை கூல் சுரேஷ் கட்சி நிராகரிக்கப்பட்டால் அது கூல் சுரேஷூக்கு பிளஸ் ஆக அமையும்.

விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

டிஆர் சார் என் தந்தை மாதிரி. என் கட்சி ஆரம்பித்த பின் என் கோட்பாடு, என் நிலை என்ன என்று உங்களிடம் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News