என் மலர்

  நீங்கள் தேடியது "teenager"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

  கொண்டலாம்பட்டி:

  சேலம் கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பாலாஜி (வயது 19). இவர் நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் வந்த ஒரு வாலிபர் திடீரென பாலாஜி வைத்திருந்த டிராவல் பேக்கை பறித்துக் கொண்டு ஓடினார்.

  உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வள்ளி பாலம் பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிக் ( 23) என்பது தெரியவந்தது.

  போலீசார், வழக்குப்பதிவு செய்து முகம்மது ஆசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்தில் வாலிபர் பலியானார்கள்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

  மதுரை

  ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 68). இவர் மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ெரயில்வே மேம்பால பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ்கோடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழங்காநத்தம் பசும்பொன் நகர் , ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை ஆனைகுளம், வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்தி கேயன் (வயது 18). தண்ணீர் லாரி கிளீனராக இருந்தார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றபோது கட்டப்புலி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  உசிலம்பட்டியை அடுத்த கீழப்பச்சேரியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 26). கொத்தனார். சம்பவத்தன்று மதியம் இவர் தனக்கன்குளம் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
  • பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

  திருமங்கலம்

  திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரினை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த சிவகார்த்தி கேயன்(வயது27) உள்ளிட்ட 7 பேர் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

  இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவகார்த்திகேயன் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மேலஉரப்பனூர் திரும்பினார். அவர் நேற்றுஇரவு கிராமத்தில் தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது சுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சிவகார்த்திகேயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

  இதில் தலை, கை, கால்களில் படுகாயமடைந்த சிவகார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

  தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மேலஉரப்பனூர் கிராமத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் வழிமறித்து மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த பணத்தை பறித்து சென்றார்.
  • பணம் பறித்தவரை போலீசார் காவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்தனர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்தி(வயது29). காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கார்த்தியை வழிமறித்து மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.450 யை பறித்து சென்றார். அக்கம் பக்கம் உள்ள வர்கள் அவரை பிடிக்க வந்த போது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து கார்த்தி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியிடம் பணம் பறித்த பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(30) என்பவரைகாவேரி நகர் பஸ் நிறுத்தம் அருகே கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை பொன்மேனி பகத்சிங் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் முத்துகண்ணன் (வயது 21). இவர் நேற்று இரவு பழங்காநத்தம் பைபாஸ் ரோடு வ.உ.சி பாலத்தில் நடந்து சென்றார்.

  அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி முத்துகண்ணன் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார். இதுதொடர்பாக முத்துகண்ணன் சுப்பிரமணியபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூர் நாயக்கர் வீதியை சேர்ந்த ரங்கநாயக்கர் மகன் சித்தராஜ்(19). லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். சித்தராஜ்க்கு கடந்த 3 மாதங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது.

  இதனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. கடந்த 4-ந் தேதி இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

  இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து, சித்தராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
  • இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  நெல்லை:

  பாளை திருவண்ணாமலை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் கூடைப்பந்து விளையாடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் இரும்பு கம்பி நட்டு வைத்திருந்தார்.

  அதனை கடந்த 4-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (39) என்பவர் அகற்ற முயன்றுள்ளார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் செல்வகுமார் கத்தரிக்கோலால் சுரேஷின் வயிற்றில் குத்தினார்.

  இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகளை வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெருந்துறை:

  பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

  பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

  இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

  மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வானூர் அருகே மின்கம்பிகளை திருடச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
  • இவரது நண்பர்கள் ராகுல் சிவதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  விழுப்புரம்:

  புதுவை மாநிலம் சேதுராப்பட்டு அருகே தரசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள் (வயது 23) ராகுல் 22 சிவதாஸ். இவர்கள் மூன்று பேரும் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மின்கம்பிகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மூன்று பேரும் நேற்று இரவு வானூர் அருகே உள்ள கடைப்பேரி குப்பம் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். மேலும் அந்த விவசாய நிலத்தில் உள்ள மின்சார கம்பத்தில் அருள் என்பவர் ஏறி மின் கம்பிகளை திருட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த இவரது நண்பர்கள் ராகுல் சிவதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வானூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள் உடலை கைப்பற்றி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருத்தாசலம் அருகே வாலிபர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
  • வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

  கடலூர்:

  விருத்தாசலம் அருகே புதுக்கூரப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தமது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்திருந்த வேல்முருக னுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்த முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(27). இவருக்கு திருமணமாகி விட்டது. குழந்தை இல்லை.

  சம்பவத்தன்று சரவணகுமார் இரு–சக்கர வாகனத்தில் முனியாண்டிபுரம் தோட்டத்து வீட்டிற்கு வந்தபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். இவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினர்.

  பரிசோதனை செய்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மனைவி யோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
  • நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

  திருமங்கலம்

  திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்(21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

  இவரது நண்பர்கள் கார்த்திக், பொன்ராசு,சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகிய 6 பேரும் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன் பட்டியில் செல்லையா என்பவருடைய தோட்ட கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

  அப்போது கோகுல் திடீரென்று கிணற்றில் மூழ்கினார். நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கோகுல் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது–குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கோகுலின் உடலை 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.

  அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

  ×