செய்திகள்
முக ஸ்டாலின்

அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றி கிடைக்க வகைசெய்வது அரசின் கடமை - மு.க.ஸ்டாலின்

Published On 2019-11-04 16:00 GMT   |   Update On 2019-11-04 16:00 GMT
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வது அரசின் கடமை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வது அரசின் கடமை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அனைத்து காய்கறிகளையும் போல, வெங்காயமும் மிக மிக அத்தியாவசியமானது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, சாமானிய மக்களுக்குப் பெரிதும் சிரமம் ஏற்படுத்தும்.

அத்தியாவசியப் பொருள்கள் சிரமமின்றிக் கிடைக்கச் செய்வதும், அதன் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதும் அரசின் கடமை என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News