தமிழ்நாடு

அநீதிக்கு எதிரான வெற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து

Published On 2024-05-10 13:07 GMT   |   Update On 2024-05-10 13:07 GMT
  • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
  • அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி நமது இந்திய கூட்டணியை பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை வலுப்படுத்துகிறது.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News