என் மலர்

  நீங்கள் தேடியது "TN Govt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தற்பொழுது மழைக்காலமாக இருப்பதால், நெல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் உயர்த்த வேண்டும்.
  • அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிமெண்ட் களம் அமைத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை பாதுகாக்கவும், மேலும் மழை நேரங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பதற்கு தேவையான தார்பாய்களை வழங்க வேண்டும்.

  சென்னை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  இந்த வருடம் மேட்டூர் அணையில் வழக்கமாக திறக்கப்படும் தேதிக்கு முன்னரே குருவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் வழக்கத்திற்கு அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர்.

  டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இம்முறை மேட்டூரில் நீர்மட்டம் குறையாமல், தொடர்ந்து 93.4 டி.எம்.சி நீர் இருப்பில் உள்ளது. அதனால் குறுவை சாகுபடியை தொடர்ந்து, தற்பொழுது சம்பா பருவ சாகுபடி நடவு செய்யும் ஆயத்தப்பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். வழக்கமாக 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள், இந்த வருடம் 14 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய பணிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆகவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்களோ, அத்தனை ஏக்கருக்கும் கடன் கொடுக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு, விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் திறந்து அவர்களின் நலன் காக்க வேண்டும்.

  மேலும் தற்பொழுது மழைக்காலமாக இருப்பதால், நெல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் உயர்த்த வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிமெண்ட் களம் அமைத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை பாதுகாக்கவும், மேலும் மழை நேரங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பதற்கு தேவையான தார்பாய்களை வழங்க வேண்டும். அவற்றிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை.
  • மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  சென்னை:

  தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் கூறப்படுகின்றன.

  இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

  இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருந்தகங்களில் அவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகளின் கையிருப்பு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

  அதன் அடிப்படையில், அத்தியாவசிய மருந்துகள் 327 வகைகளும், சிறப்பு மருந்துகள் 301 வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு தேவையான அளவில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

  தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்துகளின் கையிருப்பு குறித்து கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  தமிழகத்தில் 32 மருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய மருந்து கிடங்குகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் மருந்து கிடங்குகளை கொண்ட ஒரே மாநிலமாக தமிழகம் அமையும். ஆஸ்பத்திரிகளில் எதிர்பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அவற்றை ஆஸ்பத்திரி நிர்வாகமே கொள்முதல் செய்ய நிதி வசதியும், நிர்வாக அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

  ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மருந்துகள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தால் உடனடியாக பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

  மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசின் சார்பில் மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

  இதன் மூலம் ஆஸ்பத்திரியில் மரபணு நோய்களை கண்டுபிடித்தல், சிறப்பு சிகிச்சைகள், மரபணு நோய்களுடன் பிறப்புகளை தடுத்தல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான மேம்பாட்டு பணிகளும் நடைபெறும். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.5 கோடி மேம்பாட்டு நிதியும் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்.
  • ஏழை-எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும்.

  சென்னை:

  முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது. இதன்படி, வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலி பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இந்த விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

  தமிழ்நாடு அரசின் நடவடிக்கையையும், அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆராய்ந்து பார்த்தால், பெயரளவிற்கு கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு துவங்க உள்ளது தெள்ளத்தெளிவாகிறது. இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

  விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

  ஆனால், இதை செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல்துறை முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற நடவடிக்கை அங்குள்ள ஏழை-எளிய மக்களை அச்சுறுத்துவதாக அமையும்.

  எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

  இதற்கு மாறாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளி விட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும் பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடப்பாண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 117 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 மதிப்பெண்களும் எடுத்தால் போதுமானது.
  • வெற்றிக்குத் தேவையான 12.91 சதவீதம் மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாத நிலையில் தான் அரசு பள்ளிகளின் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  2022-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10 சதவீதம் குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40 சதவீதம் ஆகவும், 2021-ம் ஆண்டில் 54.40 சதவீதம் ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் விகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது.

  நடப்பாண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 117 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 மதிப்பெண்களும் எடுத்தால் போதுமானது. வெற்றிக்குத் தேவையான 12.91 சதவீதம் மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாத நிலையில் தான் அரசு பள்ளிகளின் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

  நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது.

  ஆனால், ஹைடெக் ஆய்வகங்கள் எனப்படுபவை நவீனமானவை அல்ல. கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள் தான். அவற்றில் மாணவர்கள் தாங்களாகவே தான் இணையத்தில் உள்ள தகவல்களை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

  மாதிரி பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சியும் கூட சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படவில்லை. மாறாக அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு தான் நடத்தப்படுகிறது. வழக்கமான பணிச்சுமையுடன் கூடுதலாக இந்தப் பயிற்சியையும் வழங்குவது அவர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் பள்ளிக்கல்வித்துறை வழங்கிய பயிற்சிகள் பயனளிக்கவில்லை.

  நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அதேநேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் வரை அரசு பள்ளி மாணவர்கள் அதில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்க முடியாது. அவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டுமானால் அதற்கு தனியார் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுவதற்கு இணையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

  சென்னை:

  திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

  இந்த மாநாட்டில் அண்டை மாநிலங்களுக்கிடையே நடக்க கூடிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

  குறிப்பாக முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் அந்த கூட்டத்தின் வாயிலாக தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடிய நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவார் என தெரிகிறது.

  இதற்காக திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

  இதற்காக அவர் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தனியாக சந்தித்து பேசுகிறார். இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  புதுக்கோட்டை:

  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

  தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.

  கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும்.

  சென்னை:

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பட்டாசு உற்பத்தியிலும், பட்டாசு வணிகத்திலும் தமிழகத்தில் சிவகாசிக்கு தனி சிறப்பு உண்டு. கடந்த 5 ஆண்டுகளாகவே தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளால் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெற்று வரும் வழக்குகளாலும் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் தமிழகத்தை பொறுத்தவரை 60 சதவீத வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது.

  உச்சநீதிமன்ற வழக்குகளும் விழாக்காலமான தீபாவளியை ஒட்டியே மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து, பட்டாசு வணிக விற்பனையை 70 சதவீதத்திற்கு மேல் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை சார்ந்திருக்கும் வணிகர்கள் தான்.

  தமிழக அரசும் பட்டாசு விற்பனை அனுமதியை வெடி பொருட்கள் சட்டம் 2008-ன்படி 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு 3 ஆண்டுகளுக்கான அனுமதியும், இதர மாவட்டங்களில் 1 ஆண்டிற்கான அனுமதி மட்டுமே வழங்கி இருக்கின்றது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பம் செய்திருந்தாலும், விற்பனைக்கான உரிம அனுமதி தீபாவளி பண்டிகை நெருக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகின்றது.

  இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதோடு, விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வதும், பொது மக்களுக்கு பாதுகாப்பாக விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவும், பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

  தமிழக அரசு பொது மக்களின் பாதுகாப்பையும், நலனையும் கருத்தில் கொண்டும், பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டும், முன்னேற்பாடுகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுப்படுத்தி மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம் என்பதை உறுதி செய்து முன்கூட்டி அனுமதி தந்து உதவ வேண்டும். இதை வலியுறுத்தி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரனுக்கு கோரிக்கை சமர்ப்பித்து உள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் அறிவிப்பு.

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.

  இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

  7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.

  மேலும், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
  • டெண்டருக்கு செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

  1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும்.
  • குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் சந்தையில் 70 சதவீதத்துக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன.

  சென்னை:

  தமிழ்நாடு அரசு துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு, அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

  இதில் ரூ.2,250 கோடி முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

  1. கோத்தாரி- பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்- காலணி உற்பத்தி.

  2. கோத்தாரி-பீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்- ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு.

  3. கோத்தாரி எஸ்.இ.எம்.எஸ். குழுமம்- தோல் அல்லாத காலணி உற்பத்தி.

  4. வேகன் குழுமம்-தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி.

  5. வாக்கரூ இண்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட்-தோல் அல்லாத காலணி உற்பத்தி.

  இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

  ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தப்படக்கூடிய ஏழாவது முதலீட்டாளர் மாநாடு இது.

  சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, துபாய் என்று பல இடங்களில் இந்த மாநாடு நடைபெற்ற போதிலும் இத்தனை மாநாடுகள், இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த மாநிலத்திலும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

  ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும்-புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும்-தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இது அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது.

  2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்கு, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளித்திடும் துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும்.

  சில நாட்களுக்கு முன்னால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். 'வளர்ச்சித் திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்' என்று சொல்லி இருந்தார். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

  இதை மனதில் வைத்து தான் தமிழக அரசினுடைய அனைத்துத் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன.

  அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், பின் தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் தனி நபர் வருமானம் அதிகரிப்பதுடன், அந்தப் பகுதியின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியின் இலக்குகளை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தி வருகிறோம்.

  தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

  எந்த முதலீட்டுச் சூழ்நிலைக்கும் அரசு தயாராக உள்ளது, அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் நிச்சயமாக தெளிவாகும்.

  சிப்காட், சிட்கோ மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

  தோல் அல்லாத காலணிகள் துறை மீது கவனம் செலுத்திடவும் நமது அரசு முனைந்து வருகிறது.

  தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் சந்தையில் 70 சதவீதத்துக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன. அதன் பொருட்டே, இன்று வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், தோல் அல்லாத காலணித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  உலகச் சந்தையில் மேக் இன் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நமது லட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே நிறைய உதவிகளை செய்து வருகிறது.
  • ரம்ஜான் பண்டிகைக்கு அரிசி, மெக்கா, ஜெருசலேம் செல்ல மானிய உதவி வழங்குகிறது.

  சேலம் :

  சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே நிறைய உதவிகளை செய்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அரிசி ,மெக்கா பயணம் செல்ல மானிய உதவி ,அதேபோல ஜெருசலேம் செல்ல மானிய உதவி வழங்குகிறது. இந்த உதவிகளை ஆண்டுக்காண்டு அதிகரிக்க செய்கிறது. அதேபோல பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல பயண கட்டண சலுகை வழங்கிட வேண்டும்.

  விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனைத்து கோவில்களுக்கும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.