செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது

Published On 2019-02-20 15:05 GMT   |   Update On 2019-02-20 15:05 GMT
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து இன்று சென்னையில் ஒப்பந்தம் கையொப்பமானது. #LSpoll #DMKCongressAlliance #Stalin #MukulWasnik #Venugopal
சென்னை:

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லிக்கு சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று பிற்பகல் சென்னை வந்தார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். 

மேலும், திமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்தனர்.



சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். #LSpoll #DMKCongressAlliance #Stalin #MukulWasnik #Venugopal
Tags:    

Similar News