இந்தியா

எழுத்துப்பூர்வமாக அளிக்க தயாரா?- காங்கிரஸ்க்கு சவால் விடும் பிரதமர் மோடி

Published On 2024-05-01 18:34 IST   |   Update On 2024-05-01 18:34:00 IST
  • மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முடிவு என பிரதமர் மோடி புகார்.
  • பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓபிசி இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலமாக மத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கிடு வழங்கியுள்ளது. எஸ்.சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. இதை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.

ஆனால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா என்ற இடத்தில் நடத்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தமாட்டோம் அல்லது அரசியலைப்போடு விளையாடமாட்டோம் அல்லது மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு (ராகுல் காந்தி) சவால் விடுகிறேன்.

மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இது மோடி என்பதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவனமாக கேட்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரை, அரசியலமைப்பு பெயரில் இடஒதுக்கீடு் விளையாட்டை விளையாட நான் அனுமதிக்கமாட்டேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News