செய்திகள்

யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?, இது வதந்தியே: அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Published On 2019-01-20 08:30 GMT   |   Update On 2019-01-20 08:30 GMT
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வந்த செய்து வதந்தியே என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சோழிங்க நல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு லோகேஷ் - ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் முக ஸ்டாலின் அரசியல் குறித்து பேசினார். அப்போது ‘‘தற்போது தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்ற செய்தி வருகிறது.

எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்’’ என்றார்

இந்நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதலளித்து கூறுகையில் ‘‘துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?. இது வதந்தியே. அவர் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்?.

அதிமுக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முக ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் செய்த சதிதான் இது. காலையில் எழுந்த உடனே என்ன சூழ்ச்சி செய்யலாம் என நினைக்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News