search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஜெயக்குமார்"

    • தமிழகத்தில் 15 அமைச்சர்கள் தங்கள் துறைகள் மூலம் ஊழல் செய்து உள்ளனர்.
    • தி. மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மரியாதை நிமித்தமாக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். .தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது என்பது குறித்து அவரிடம் தெரிவித்தோம். அப்போது அவரிடம் நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தினோம். தமிழகத்தில் 15 அமைச்சர்கள் தங்கள் துறைகள் மூலம் ஊழல் செய்து உள்ளனர். அவர்கள் குறித்த பட்டியலை பெயருடன் அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் மணல் மாபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர். அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மற்றும் திருவள்ளூரில் விடுதலை சிறுத்தை கட்சி, பா.ஜ.க பிரமுகர்கள் உள்ளிட்ட 10 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் பேச்சுரிமை இல்லை. கருத்துரிமை இல்லை. ஒரு மினி எமர்ஜென்சி போல தி.மு.க செயல்படுகிறது. அறிவை கூட விலைக்கு வாங்கும் துர் பாக்கியநிலை உள்ளது. தி. மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க ஆட்சி. அவர்கள் தற்போது ஊழலில் திளைத்து வருகிறார்கள். கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை கோடிக் கணக்கான ரூபாய் ஊழல் செய்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
    • பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்வதாக தகவல் வெளியானது.

    அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும்.

    அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும்.

    பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #MinisterJayakumar
    பாரத பிரதமர் மோடி மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.

    அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் ‘‘தமிழகத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா அலைதான் வீசுகிறது. மக்களின் நலன்கருதி அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம். முதல்வர் பழனிச்சாமி தமிழகத்திற்கான திட்டங்களை பிரதமர் மோடியிடம் போராடி பெற்று வருகிறார்’’ என்றார். #AIIMSMadurai #NarendraModi #Jayakumar

    ஐகோர்ட் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #HRaja #Jayakumar
    சென்னை:

    புதுக்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சென்னை ஐகோர்ட் குறித்து கீழ்தரமாக பேசியது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எச் ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
    குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல் டீசல் விலை  உயர்வை  குறைப்பதற்கு மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்எண்ணை ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. தினகரன் வரும் காலத்தில் நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என தனிமைப்பட்டு நிற்பார்.

     ராஜுவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்கு வலு சேர்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே சட்ட வல்லுனர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை என்பது தான் அரசின் நோக்கம். தி.மு.க. மத்தியிலும் , மாநிலத்திலும் அதிக அதிகார பலத்தோடு இருந்தபோது அவர்களது விடுதலையை உறுதிப்படுத்தவில்லை.


    குட்கா ஊழல் தொடர்பாக  சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறியிருக்கிறார்.  ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministerjayakumar #ministerVijayabaskar #Gutkha
    மக்கள் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்றைய தினம் முதல்-அமைச்சர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விரிவாக பேசினார். மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு ஏற்காது. ஆலையை தி.மு.க. திறப்பதற்கும், அதை நடத்துவதற்கும் அனுமதி அளித்ததை புள்ளி விவரங்களோடு முதல்-அமைச்சர் இங்கே பட்டியலிட்டார். மத்திய சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த ராஜா, தமிழகத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மைதீன்கான் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியளித்தனர்.

    இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. ஆட்சிதான் என்று முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் இருந்து யார் தவறு செய்தார்கள் என்று தெரியமுடிகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 320 ஏக்கர் நிலம் கொடுத்ததும், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான். அதை ரத்து செய்தது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.


    எங்கே தமிழக மக்கள் நம்மை புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், இன்று சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி பேசுகிறார்கள். 22 ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று சதி செய்கிறார்கள். அந்த சதி முறியடிக்கப்பட்டு இந்த ஆட்சி வெற்றி நடைபோடுகிறது.

    முதல்-அமைச்சர் தெளிவான விளக்கம் கொடுத்த பிறகும், சட்டசபையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போட்டனர். அப்போது ஜெயலலிதா மட்டும் தன்னந்தனியாக சட்டசபைக்கு வந்தார். சிங்கம் எப்போதும் தனியாகத்தான் வரும். 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, 37 முறை குறுக்கீடு இருந்தது.

    தற்போது சபாநாயகர் ஆசனத்தில் உட்கார்ந்து இருக்கும் சபாநாயகர் ப.தனபால், அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி ஜனநாயக மாண்பை கட்டிக்காத்து வருகிறார். அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன் ஜனநாயக மரபுகளை புறக்கணித்து எங்களை ஒருமையில் பேசி உட்காரச்சொன்னார்.

    கடந்த ஆண்டு இந்த அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தபோதுகூட, தி.மு.க. உறுப்பினர்கள் மரபுகளை மீறி நடந்துகொண்டார்கள். நான்கூட பேரவை தலைவராக இருக்கும்போது கோபம் வரும். ஆனால், தற்போதைய சபாநாயகர் அமைதியின் சொரூபமாக விளங்குகிறார்.

    ஜனநாயகத்திற்கு குழி தோண்டப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். இன்று அனைவருக்கும் சட்டசபையில் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தமிழக மக்களுக்கு இதை உணர்த்தத்தான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

    இவ்வாறு ஜெயக்குமார் பேசினார். #DMK #MKStalin #MinisterJayakumar #TNAssembly
    ‘கோர்ட்டு உத்தரவை மதிப்பது அரசின் கடமை’ என்றும், ‘நடிகர் எஸ்.வி.சேகர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #SVeShekher #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாகி சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியிருக்கிறாரே?

    பதில்:- சட்டம்-ஒழுங்கு பற்றி தி.மு.க. பேசக்கூடாது. தி.மு.க. ஆட்சிகாலத்தில் நடந்த கலவரங்களையும், அக்கிரமங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் நடந்துவந்த காட்டுமிராண்டி தர்பார் ஒழிக்கப்பட்டு, சாதி-மத கலவரமின்றி தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கனிமொழி பேசலாமா? அது தவறு.

    கேள்வி:- தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று திவாகரனுக்கு, சசிகலா தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறதே?

    பதில்:- இது அவர்களது குடும்ப சண்டை. அதற்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.

    கேள்வி:- நடிகர் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படுவாரா?


    பதில்:- நீதிமன்ற உத்தரவை தலைவணங்கி நிறைவேற்றுவது அரசின் கடமை. எனவே எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றம் வலியுறுத்தும் நடவடிக்கைகளை நிச்சயம் அரசு மேற்கொள்ளும்.

    கேள்வி:- ‘கர்நாடக மாநில தேர்தலால் தான் காவிரி விவகாரம் தள்ளிப்போகிறது’, என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?

    பதில்:- இந்த கருத்து தமிழக மக்களுக்கே வேதனை தருகிறது. அவரது மனதின் எண்ணம் வெளியே வந்திருக்கிறது. தமிழக நலனை எண்ணாமல், கர்நாடக நலனை முன்வைத்து பேசிய இந்த பேச்சு நிச்சயம் ஏற்கமுடியாது.

    கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையை பொறுத்துதான் ரஜினிகாந்த் கட்சியின் பெயரை அறிவிப்பார் என விமர்சனங்கள் எழுகிறதே?

    பதில்:- தமிழகத்தை தீய சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க அதிமுக எனும் பேரியக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, அவரது அழைப்பை ஏற்று மக்கள் ஓடோடி சென்று கட்சியில் இணைந்தனர். ஆனால் இன்றைக்கு தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை எவ்வளவு? என்பதை கமல்ஹாசன் சிதம்பர ரகசியமாக வைத்துள்ளார். உறுப்பினர் சேர்க்கையை எதிர்பார்த்து கட்சி தொடங்கும் தினத்தை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக கூறுகிறார்கள். தமிழக மக்களிடம் இவர்கள் இருவருக்கும் வரவேற்பு இல்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.

    கேள்வி:- கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

    பதில்:- கர்நாடகாவில் யார் ஆட்சியில் அமரவேண்டும் என்று தமிழக மக்களோ, நாங்களோ தீர்மானிக்க முடியாது. ராமனோ, ராவணனோ யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை. எங்களுக்கு தேவை காவிரியில் தமிழகத்தின் உரிமை. அது அமல்படுத்தப்பட வேண்டும். அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.  #SVeShekher #MinisterJayakumar #SVeShekher #Jayakumar
    ×