செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை ஓயமாட்டேன்- வைகோ பேட்டி

Published On 2018-04-26 10:11 GMT   |   Update On 2018-04-26 10:11 GMT
பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எனது போராட்டம் தொடரும் என்று வைகோ கூறினார். #vaiko #Sterliteplant

மதுரை:

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை பார்க்க ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

வழக்கு விசாரணை முடிந்த பின் கோர்ட்டுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட் லைசென்சு மார்ச் மாதத்திலேயே காலாவதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் 2-வது யூனிட்டுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு உதவியுடன் அந்த நிறுவனம் மறைமுகமாக செய்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் படிப்படியாக குறைந்தபின் ஆலை தொடங்குவதற்கான மறைமுக ஒப்பந்தத்தை அரசு செய்து வருகிறது என்பதை பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.

பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எனது போராட்டம் தொடரும். இன்று தூத்துக்குடிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவேன்.

இவ்வறு அவர் கூறினார். #tamilnews #vaiko #Sterliteplant

Tags:    

Similar News