இந்தியா

வாக்குப்பதிவின்போது EVM இயந்திரத்தை உடைத்த பாஜக வேட்பாளர் கைது.. ஒடிசா போலீஸ் அதிரடி

Published On 2024-05-26 12:33 GMT   |   Update On 2024-05-26 12:47 GMT
  • ஒடிசாவில் நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார்.

ஒடிசாவின் குர்த்தா மாவட்டத்தில் நேற்று (மே 25) நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நடந்த நிலையில், குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏவான பிரசாந்த் ஜக்தேவ், நேற்று பிரசாந்த் ஜக்தேவ் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

 

வாக்களிக்க நீண்ட வரிசையில் அவர் காத்திருந்த நிலையில் EVM இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மேலும் தாமதமானது. இதனால் பொறுமை இழந்த அவர், தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார். இதனால் EVM இயந்திர விழுந்து உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று (மே 26) கைது செய்துள்ளனர். அப்பகுதியில் செல்லாக்கு மிக்க பாஜக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News