search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது.
    • அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது. மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் ஹேமந்த், புறநகர் டி.எஸ்.பி. சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்புத்துறை மாவட்ட துணை அலுவலர் ராஜூ மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணிக்காக ஒரு ஒப்பந்தக்காரரை தேர்வு செய்து, கழிவுகளை அகற்றுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும், எவ்வளவு நாட்கள் தேவைப்படும், என்னென்ன எந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் 9 பேர் கொண்ட மேலாண்மை குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது. அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன்மூலம் கழிவுகள் அகற்றும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவன வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்.
    • துணை கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

    நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள ஆலை நிர்வாகம் அனுமதி கேட்ட நிலையில், அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.

    இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உபகரணங்கள் பாதிப்படையும் எனக் கூறப்பட்டது. அதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள துணை கலெக்டர் தலைமையிலான 9 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாவும், ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி கிடையாது எனவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
    • தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.

    புதுடெல்லி:

    சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையின் சிவில் மற்றும் கட்டுமான பாதுகாப்பு, உறுதி மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு உயர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓர் அறிக்கையை அளித்தது.

    இந்த குழு தீவிரமான கட்டுமான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தது.

    இதனையடுத்து கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஒரு கடிதம் அனுப்பினார்.

    அதில் ஆலையில் மீதியுள்ள ஜிப்சத்தை அகற்றும் நடவடிக்கையை, அதற்கு தேவையான வேலையாட்களை, லாரி முதலிய எந்திரங்களை அனுமதிக்கலாம். ஜிப்சம் முழுவதும் அகற்றப்பட்டபிறகு அதற்கான அனுமதி திரும்ப பெறப்படும். இந்த பணியை செய்ய எவ்வளவு நாள், எவ்வளவு ஆட்கள், எந்திரங்கள் தேவை என்ற விரிவான முன்மொழிவை ஆலை வழங்க வேண்டும்.

    ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவு நீர் வெளியாகும் வரையில், அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தினசரி கழிவு நீரை மீண்டும் கழிவுக்குழிக்குள் பம்பிங் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 4-வது கழிவுக்குழியின் கரை உடைவதை தடுப்பதற்காக அதனை சீர் செய்யும் வேலையை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆட்களை கொண்டு இதனை செய்ய வேண்டும்.

    பசுமை வட்டப் பராமரிப்பு, புதர்களையும், காய்ந்த மரங்களையும் அகற்றும் பணிகளைப் பொறுத்தவரை ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் நடக்க வேண்டும்.

    மேற்கண்ட 4 நடவடிக்கைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம் குறிப்பிடுகிறது.

    அதே நேரம், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்பதையும் கோர்ட்டு குறிப்பிட்டது.

    ஆலை வளாகத்தில் சிவில், கட்டுமானப் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியே கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.

    கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தில் அனுமதி அளித்த செயல்பாடுகளை பொறுத்தவரை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோர்ட்டு அனுமதிக்கிறது.

    மாவட்ட கலெக்டர் பரிந்துரை அளிக்காத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மேற்கொண்டு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

    இந்த அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த தொழிற்சாலையில் ரிபைனரி, காப்பர் ராட் பிளான்ட், 160 எம்.டபிள்யூ.கேப்டிவ் பவர் பிளாண்ட், சல்பரிக் ஆசிட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் நச்சு புகைகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    100-வது நாளான மே 22-ந் தேதி போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

    அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதே ஆண்டு மே 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

    இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக சில மாதங்கள் திறக்க அனுமதி கோரி புதிதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்ததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் 3 மாதம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்றது. பின்னர் காலஅவகாசம் முடிந்ததால் மீண்டும் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

    மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆலையை திறக்க மனு தாக்கல் செய்த போதும் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம் ஆயில், கேஸ், ஜின்க், லீட், சில்வர், காப்பர், இரும்புத்தாது, ஸ்டீல், அலுமினியம் மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடியில் உள்ள நவீன ஸ்மெல்டர், ரிபைனிங் காம்ப்ளக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி வேதாந்தா, ஆக்சிஸ் கேபிடல் உடன் இணைந்து ஸமெல்டர் காம்ப்ளக்ஸ் (முதன்மை மற்றும் 2-ம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்.ஓ. யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேஷன் யூனிட், வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் ஆகிய 10 வகையான யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆர்வமுள்ள பொருளாதார திறன் கொண்ட தரப்பினர் அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
    • ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

    மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும்.

    எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக ஆலை திறக்கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல். நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை. ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எனது பெயரில் லாரிகள் ஓடுகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கீதா ஜீவன் எம்.எல்.ஏ. பகிரங்க சவால் விடுத்துள்ளார். #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.

    அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவர் பெயரில் 600 வண்டிகள் ஓடுவதாகவும், அதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, ‘1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்க தொடங்கியபோது ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக எனது மருமகன் ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்ததார். 2002-ம் ஆண்டுக்கு பின்னர் எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக்கொண்டார்’ என்று கூறினார்.


    இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தும், அதனை நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து கீதா ஜீவன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவல்களை கூறியிருக்கிறார். அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு அப்பட்டமான பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எதுவும் எடுக்கவில்லை.

    என்னுடைய, எங்கள் குடும்பத்தினருடைய லாரிகள் எதுவும் அங்கு ஓடவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.வான என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியிருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்தை நிரூபித்தால் நான் பதவி விலக தயார். உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #Thoothukudi #GeethaJeevan
    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார். #SterliteProtest #Thoothukudi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். 13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார்.

    அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாகவும், அதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.  #SterliteProtest #Thoothukudi  #EnvironmentMinister #HarshVardhan
    தூத்துக்குடி போராட்டத்தில் பலியானவர்களுக்கு நீதி பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #SterliteProtest #Thoothukudi #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிய ‘மய்யம் விசில்’ செயலிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக அரசால் பதில் சொல்ல முடியுமா? என்று கூறி கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். இதேபோல அதனை அறிக்கையாகவும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-


    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு இதுவரை தமிழகத்திலோ இந்தியாவிலோ கேட்டும், அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச்சம்பவம் அண்மை காலத்தில் நடந்தேறியது இல்லை. இந்த சம்பவம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காத தமிழக அரசின் மவுனம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது.

    * யார் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது?

    * துப்பாக்கி சூட்டுக்கு அனுமதியளிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்ன?

    * துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விவரங்களும் குண்டுகளின் விவரங்களும் இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை?

    * இறுதியாக துப்பாக்கி சூடு நடைபெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் ஏன் இன்னும் தெரியப்படுத்தவில்லை?

    * துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் விவரங்களும், காயமடைந்தவர்களின் விவரங்களும் ஏன் அளிக்கப்படவில்லை?

    * இரண்டாம் நாளில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் குறித்து முழுவிவரம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாதது ஏன்?

    இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு இதுவரை விடை அளிக்கவோ, விளக்கம் அளிக்கவோ இல்லை.


    போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் மீது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாகவே இருக்கிறது. எனவே அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் தண்டனை நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்தோ அல்லது பணியில் இருந்து நீக்கம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், முழு பொறுப்பான அரசை நடத்தும் அரசியல் சக்திகளையும் தண்டனைக்கு உள்ளாக்குவது மிகவும் அவசியம்.

    13 பேரின் உயிரிழப்புக்கு எந்தவித பொறுப்பு ஏற்காமல் தட்டிக்கழிப்பதும், அதுகுறித்த கேள்விகளுக்கு பதிலும் சொல்லாமல் இருப்பது மக்களாட்சியின் மாண்புக்கு உகந்தது அல்ல. மக்கள் நீதி மய்யம் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், தொடர்ந்து எந்தவித சுணக்கமும், தொய்வும் இன்றி தகுந்த ஆதாரங்களையும், தகவல்களையும் சேகரித்துக்கொண்டே இருக்கும். இந்த மண்ணையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளில் மக்களின் குரலாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    இந்த கொள்கையின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் தனது ‘மய்யம் விசில்’ செயலி மூலமாக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அக்கறையுள்ள பொதுமக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், கோர்ட்டுகள், தமிழக கவர்னர், ஜனாதிபதி வழியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    தூத்துக்குடி வாழ் சகோதர, சகோதரிகளின் தோளோடு தோள் நின்று இந்த துயர சம்பவத்தில் பலியான போராட்டக்காரர்களுக்கு நீதி பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என உறுதி அளிக்கிறது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Tuticorin #TuticorinSting #KamalHaasan
    நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
    சென்னை :

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச்சூடு தான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாக கருத வேண்டி உள்ளது.

    நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம். இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக் கூடாது.

    துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தீர விசாரித்து அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

    துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதால் அப்போதே, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 3 மாநிலங்கள் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க விடாமல் விரட்டியடித்து உள்ளனர். #SterliteProtest #Sterlite
    புதுடெல்லி:

    வேதாந்தா தொழில் நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை இந்தியாவில் அமைப்பது என்று 1995-ல் முடிவு செய்தது. இதற்காக பல மாநிலங்களில் ஸ்டெர்லைட் அணுகியது.

    குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் அந்த மாநில மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலை அமைக்கப்படவில்லை.

    அதன் பிறகு தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததால் தூத்துக்குடியில் ஆலை அமைக்கப்பட்டது. 4 லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை உருவாக்கப்பட்டது. தாமிர ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்கு அனுமதி கொடுப்பது என்பது எளிதான வி‌ஷயம் அல்ல.

    ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம் தவறான தகவல்களை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கொடுத்து அனுமதி பெற்றுவிட்டதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு கூறி உள்ளது.


    அதாவது இந்த ஆலை அமையும் இடத்தில் 25 கி.மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்க கூடாது.

    ஆனால், இந்த ஆலையின் அருகிலேயே முன்னாறு கடல் தேசிய பூங்கா உள்ளது. அதை மறைத்து சுற்றுச்சூழல் அமைப்பில் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஆலையில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அந்த பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். அப்படி கலந்தாலோசனை நடத்தாமலேயே ஒப்புதல் பெற்றதாக சுற்றுச்சூழல் அமைப்பில் காட்டி இருக்கிறார்கள்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன என்று அறிவியல் சுற்றுச்சூழல் இயக்கம் கூறி இருக்கிறது.

    இந்த இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல் சுனிதா நாராயணன் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையால் 20 ஆண்டுகளாக கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அதை விரிவாக்கம் செய்ய முயன்றதால் மக்கள் அதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். அவர்கள் பேராட்டம் நியாயமானது என்று கூறினார்.

    இந்த ஆலை தொடர்பாக கோர்ட்டு அமைத்த ஆய்வு கமிட்டி சோதனையில் பல்வேறு முறைகளில் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2004-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வில் இதன் கழிவு பொருட்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ஆர்செனிக் ரசாயனம் அதிக அளவில் இருப்பதும், சல்பர் டைஆக்சைடு வாயுவை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெளியிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. #SterliteProtest #Sterlite
    மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தின் போது நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பொதுச் செயலாளர் தண்டபாணி, தென் மண்டல அமைப்பு செயலாளர் சந்திர சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×