இந்தியா

மணிப்பூர் சாலையில் வைக்கப்பட்ட அதிநவீன IED வெடிகுண்டுகள் - களத்தில் இறங்கிய ராணுவம்

Published On 2024-05-26 11:13 GMT   |   Update On 2024-05-26 12:36 GMT
  • மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.
  • வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

மணிப்பூரின் தலைநகர் இம்பால் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தால் மூன்று அதிநவீன வெடிகுண்டாக IED செயலிழக்கச் செய்யப்பட்ட்டுள்ளது.46 கிமீ இடைவெளியில் உள்ள நோங்டாம் மற்றும் இத்தம் கிராமங்களை இணைக்கும் சாலையில் ஐஇடி வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

வழக்கமாக கண்காணிப்பு ரோந்தின்போது இராணுவ வீரர்கள் மூன்று IEDகள், சாலையோரம், ஒன்றாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட ராணுவம், அந்த சாலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் குழு அந்த இடத்திற்கு வந்து IED குண்டுகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தது. இதனால் கிராமப் பகுதியில் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

 

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குக்கி- மெய்தேய் பழங்குடியினருக்கு இடையே மோதல்கள் வெடித்து ஒரு ஒரு வருடத்திற்கும் மேலாகியும் அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

 

இதனால் மணிபூர் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலையடிவாரங்களுக்கு அருகில், இரு சமூகங்களின் கிராமங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று ராணுவத்தினர் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News