செய்திகள்

பாராளுமன்ற - சட்டமன்ற தேர்தலை இணைத்து நடத்துவது குறித்து விரைவில் முடிவு: அருண் ஜெட்லி

Published On 2018-01-14 15:10 GMT   |   Update On 2018-01-14 15:10 GMT
பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி சென்னையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார்.

விழாவில் அவர் பேசும் போது, மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் மட்டுமே. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.

ரூபாய் நோட்டு வாபஸ் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளத. செலவினங்களை குறைக்கும் விதமாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்
Tags:    

Similar News