இந்தியா

48 மணி நேரத்திற்குள் வாக்கு சதவீதத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

Published On 2024-05-24 10:10 GMT   |   Update On 2024-05-24 10:10 GMT
  • வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதில் முரண்பாடு என விமர்சனம்.
  • தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை மாற்றியதாக கட்சிகள் விமர்சனம் செய்தன.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையிலும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதத்தை தெரிவிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரியவந்தது. மேலும், முதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் எனத் தெரிவித்தனர். பின்னர் பதிவான வாக்கு சதவீதம் அதிகரித்து வெளியிடப்பட்டது.

இதனால் 48 மணி நேரத்திற்குள் பூத் வாரியாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என என்ஜிஓ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்த்ரா சர்மா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக் வந்தது. அப்போது நீதிபதிகள் "ஏற்கனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால், நாங்கள் அதில் தலையிடமுடியாது. முக்கியமான ரிட் மனுவுடன் இந்த மனு சேர்ந்து விசாரிக்கப்படும்.

தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நீதித்துறை அதில் தலையிட்டு உத்தரவு பிறப்பித்தால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செயல்முறையை பாதிக்கும். அமைப்பு (தேர்தல் ஆணையம்) மீது கொஞ்ச் நம்பிக்கை வைப்போம்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News