மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் - விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!
- மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும்.
மகாராஷ்டிராவில் மும்பை, புனே உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் 227 வார்டுகளில் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு மட்டும் 1.03 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கும், பாஜக-சிவசேனா கூட்டணிக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
மேலும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிப்ரவரி 5 அன்று தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளைமுதல் முதல் ஜனவரி 18 வரை நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 7 அன்று நடைபெறும்