மும்பை மற்றும் 28 மாநகராட்சிகள் தேர்தலில் 50 சதவீத வாக்குப்பதிவு
- மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- 227 கவுன்சிலர் இடங்களுக்கு 1700 பேர் போட்டி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் மேலும் 28 மாநராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் 46 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பின்னர் சரியான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.
கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்கு தேர்தல நடைபெற்றது. அப்போது 55.53 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்முறையாக தேர்தலை சந்தித்த ஜால்னா மற்றும் இசால்கராஞ்சி மாநகராட்சிகளில் 56.35 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளா்ர.
மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும், தாக்கரே சகோதரர்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 227 கவுன்சிலர் இடங்களை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1700 பேர் போட்டியிட்டனர்.
மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய தேர்தல், தற்போது நடத்தப்பட்டுள்ளது.