இந்தியா

உ.பி. சட்டசபை தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டி: மாயாவதி

Published On 2026-01-15 14:56 IST   |   Update On 2026-01-15 14:56:00 IST
  • 2027 உ.பி. சட்டசபை தேர்தலில் பிஎஸ்பி தனித்து போட்டியிடும்.
  • சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து, 5-வது முறையாக ஆட்சியை பிடிப்போம்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தலிகளிலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

லக்னோவில் தனது 70-வது பிறந்தநாளில், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "சிறு மற்றும் பெரிய தேர்தல்கள் அனைத்திலும் தனித்து போட்டியிடுவதே மிகவும் பொருத்தமானது என்றும், எந்தக் கட்சியுடனும் எந்தவிதமான கூட்டணியிலும் ஈடுபடப் போவதில்லை" என்றார்.

மேலும், "இது குறித்து எந்த குழப்படும் இருக்கக் கூடாது. பிஎஸ்பி உத்தர பிரதேசத்தில் நடக்க இருக்கும் அடுத்த சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிடும். பாஜக, காங்கிரஸ் மற்றும் மற்ற சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கு பிஎஸ்பி சரியான பதிலடி கொடுத்து, உத்தர பிரதேசத்தில் 5-வது முறையாக ஆட்சி அமைக்கும்" என்றார்.

Tags:    

Similar News