தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
- பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும்.
இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பொங்கல் திருநாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இந்தப் பொங்கல், உங்கள் இலக்குகளை நிறைவேற்ற புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்க வேண்டும் என மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்.
மேலும், பிரதமர் மோடி மற்றொரு பதிவில், " சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி குறித்தும், 'ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்' உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது பற்றியும் எனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.