செய்திகள்

அரசு நிர்ணயித்த விலையில் மணல் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-12 13:12 GMT   |   Update On 2018-01-12 13:12 GMT
அரசு நிர்ணயித்த விலையில் மணல் வழங்கக்கோரி பரமத்தி வேலூர் அண்ணா சிலை முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அண்ணா சிலை முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடு,கட்டிடம் கட்டும் உரிமையாளர்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் அரசு நிர்ணயித்த விலையில் மணல் வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டதுக்கு தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட தலைவர் வேலுப்பிள்ளை தலைமை தாங்கினார். வேலூர் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் வேலுசாமி, சேகர், பரமத்தி வேலூர் சிமெண்ட், இரும்பு மரம் அன்ட் எலக்ட்ரிக்கல் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன், செயலாளர் ஜவகர், பரமத்தி வேலூர் லேத், கிரில் அன்ட் வெல்டிங் பணியாளர்கள் சங்க தலைவர் குமார், செயலாளர் சங்கர், பரமத்தி வேலூர் மினி ஆட்டோ ஓட்டுனர்கள் அன்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு சாரா கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் ஆர்.வி.விஸ்வநாதன், பொருளாளர் செல்வராஜ், இணை செயலாளர் தமிழ்செல்வி உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

தொடக்கத்தில் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ரவி நன்றி கூறினார். #tamilnews
Tags:    

Similar News