செய்திகள்

ராகுல்காந்தி பார்வையிட்டதால் மோடியும் வருகிறார்: திருநாவுக்கரசர்

Published On 2017-12-19 07:34 GMT   |   Update On 2017-12-19 07:34 GMT
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ராகுல்காந்தி பார்வையிட்டதால் தான் மோடியும் இன்று வருகிறார் என திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்றுதான் வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உடனடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனால் தான் மோடியும் வருகிறார். இது தாமதமான வருகை. கண்டனத்துக்குரியது.


தாமதமாக வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முதற்கட்ட நிவாரணமாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க வேண்டும்.

கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்குமுன்பு காணாமல் போனவர்களை 7 வருடம் கழித்துதான் இறந்ததாக கருதி நிவாரணம் வழங்கப்பட்டது. அதை தற்போது 2 வருடமாக குறைத்து இருக்கிறார்கள். ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களுக்கு இதில் சிறப்பு சலுகை வழங்கி விரைவில் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

இறந்துபோன மீனவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது. அதேபோல் உள்நாட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

விவசாயிகள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News