செய்திகள்

பள்ளி கட்டிடம் இடிந்து பலியான 2 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை: நாராயணசாமி

Published On 2017-12-06 10:13 GMT   |   Update On 2017-12-06 10:14 GMT
பள்ளி கட்டிடம் இடிந்து பலியான இருவர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு கல்வித்துறை மூலம் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சேதராப்பட்டு:

தொண்டமாநத்தம் அரசு பள்ளியின் கட்டிடத்தை இடித்த போது அதில் சிக்கி ஊழியர்கள் அய்யனார், சிவபாரதி ஆகியோர் உயிர் இழந்தனர்.

விபத்து நடந்த இடத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கல்வித்துறை இயக்குனர் குமார், பொதுப்பணித்துறை தலைமை இயக்குனர் சண்முகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் 52 பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

தற்போது 28 கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பள்ளியில் பணி நடந்த போது விபத்து நேர்ந்து விட்டது. இதில் பலியான இருவர் குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அரசு கல்வித்துறை மூலம் அரசு வேலை வழங்கப்படும்.

மேலும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்தும் உதவி அளிக்கப்படும். தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News