இந்தியா

பூரண மதுவிலக்கு: முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2024-04-28 07:02 GMT   |   Update On 2024-04-28 07:02 GMT
  • ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.

திருப்பதி:

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆடை பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.கர்னூலை நீதித்துறை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும் மாற்றப்படும்.

ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும். கடப்பாவில் இரும்பு ஆலை தொடங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.

அம்மா ஓடி திட்டத்தில் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.அதில் ரூ.15 ஆயிரம் தாய்மார்கள் கணக்கில் சேர்க்கப்படும். பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

வாகன மித்ரா திட்டத்தின் கீழ் லாரி மற்றும் டிப்பர் டிரைவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆட்டோ டாக்சி டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு அமல்படுத்தப்படும்.

எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News