செய்திகள்

கொடுங்கையூர் தீ விபத்து: தீயணைப்பு வீரர் உடல் தகனம் - விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி

Published On 2017-07-17 11:35 GMT   |   Update On 2017-07-23 05:41 GMT
கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பலியான தீயணைப்பு வீரர் உடலுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகராஜ். தீயணைப்பு வீரரான இவர் மாற்றுப்பணியாக சென்னை சென்றார். அங்கு கொடுங்கையூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீயை அணைக்க சக வீரர்களுடன் ஏகராஜ் சென்றார்.

அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஏகராஜ் பலியானார். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான ஏகராஜின் உடல் சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான விருதுநகர் வந்தது. அங்கிருந்து தடங்கம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், தீயணைப்புத்துறை துணை இயக்குநர்கள் சரவணக்குமார் (மதுரை), சரவணபாபு (நெல்லை), விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சுப்பிரமணியன், உதவி அதிகாரி மணிகண்டன், விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ஏகராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு காரணமாக தடங்கம் கிராமம் சோகமாக காணப்பட்டது.
Tags:    

Similar News