செய்திகள்

கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்படும் - பிரதமர் மோடி

Published On 2019-05-16 06:15 GMT   |   Update On 2019-05-16 06:15 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
லக்னோ:

வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.
 
இதற்கிடையே, கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.



இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
Tags:    

Similar News