search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அதிமுக-பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரை ஜீவா நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிரிட்டோ தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களுக்காக ஏற்படுத்தினார். அ.தி.மு.க.வை நாட்டின் வலுவான இயக்கமாக புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கி காட்டினார். 1½ கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. இன்றைக்கு இந்த இயக்கத்தை வீழ்த்திட பகல் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    ஏழை, எளிய மக்களின் அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்து தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று தந்து வருகிறார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் காங்கிரசுடன் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், திரவியம், எம்.எஸ்.பாண்டியன், கருப்புசாமி, பரவை ராஜா, ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×