என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`கலகலப்பு 2' படப்பிடிப்பில் இணைந்த மிர்ச்சி சிவா
Byமாலை மலர்4 Oct 2017 6:20 AM GMT (Updated: 4 Oct 2017 6:31 AM GMT)
சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாக இருக்கும் `கலகலப்பு 2' படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
`சங்கமித்ரா' பிரமாண்ட படத்திற்கு முன்பாக `கலகலப்பு' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார்.
`கலகலப்பு-2' படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதை முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவா `கலகலப்பு 2' படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கும் `கலகலப்பு-2' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து புனே, வாரணாசி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இதில் படக்குழுவினர் பலரும், நடிகர்கள் மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், மனோபாலா, வையாபுரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய படப்பிடிப்பு டிசம்பர் தொடக்கத்தில் முடிவடைகிறது. ஜனவரியில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா' படத்தின் பணிகளை சுந்தர்.சி. தொடங்க இருக்கிறார்.
கடந்த 2012-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `கலகலப்பு' படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு 2 படப்பிடிப்பு மிர்ச்சி சிவா ஜீவா ஜெய் கேத்தரின் தெரசா நிக்கி கல்ராணி சங்கமித்ரா ஆர்யா ஜெயம் ரவி சுந்தர்.சி கலகலப்பு கலகலப்பு 2 விமல் அஞ்சலி ஓவியா Sangamitra Arya Jayam Ravi Sundar C kalakalappu kalakalappu 2 Shruti haasan vemal mirchi shiva oviya anjali jiiva jai catherine tresa nikki galrani kalakalappu 2 shoot
Next Story
×