search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தர்.சி"

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை.
    • 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன்

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர்.

    இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா, ஹன்சிகா நடித்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் 2021-ல் அரண்மனை - 3- படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்தனர்.

    இப்படமும் வெற்றி பெற்றதை யொட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் அரண்மனை- 4 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர். சி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.



    இப்படத்தில் நடிகை தமன்னா மீண்டும் பேய் வேடத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவில் தமன்னா பேசியபோது "அரண்மனை - 4  திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன். இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறப்பான திகில் படமாக அமைந்து உள்ளது." என்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    சுந்தர்.சி  - நாசர்

    சுந்தர்.சி  - நாசர்

    அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர்கரும் இயக்குனருமான சுந்தர்.சி மற்றும் நடிகர் நாசர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

    • சுந்தர்.சி தற்போது தலைநகரம் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
    • இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

    'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தலைநகரம் 2

    தலைநகரம் 2

    அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

    தலைநகரம் 2

    தலைநகரம் 2

    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • முன்னணி இயக்குனரான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை-3 ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • தற்போது இவர் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    முன்னணி நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாம் பூச்சி'. இப்படத்தில் ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பத்ரி இயக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி டெலி மீடியா தயாரித்துள்ளது.

    பட்டாம் பூச்சி

    பட்டாம் பூச்சி

    நவ்நீத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சைக்கோ த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    சமீபத்தில் இப்படம் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி தற்போது இயக்கியுள்ள படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'அரண்மனை 3' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 75 நாட்கள் நடைபெற்று தற்போது இதன் பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

    காபி வித் காதல்

    காபி வித் காதல்

    இந்நிலையில் 'காபி வித் காதல்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனுடன் இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×