பேய் வேடம் : "டிரெய்லர் காட்சியை பார்த்து பயந்துட்டேன்" -தமன்னா

அரண்மனை - 4 திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை.'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன்
பேய் வேடம் : "டிரெய்லர் காட்சியை பார்த்து பயந்துட்டேன்"  -தமன்னா
Published on

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் நடித்தனர்.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'அரண்மனை-2' படத்தில் 2016-ல் திரிஷா, ஹன்சிகா நடித்தனர். அந்த படமும் வெற்றி பெற்றது. மேலும் 2021-ல் அரண்மனை - 3- படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் நடித்தனர்.

இப்படமும் வெற்றி பெற்றதை யொட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் அரண்மனை- 4 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர். சி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் நடிகை தமன்னா மீண்டும் பேய் வேடத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் தமன்னா பேசியபோது "அரண்மனை - 4  திகில் படத்தில் பேய் வேடத்தில் நடித்த போது எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது 'டிரெய்லர்' வெளியீட்டில் அந்த காட்சியை பார்த்த போது மிகவும் பயந்து விட்டேன். இசையின் வேகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு சிறப்பான திகில் படமாக அமைந்து உள்ளது." என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com